Ad

புதன், 30 செப்டம்பர், 2020

32 மாவட்டங்களில் தொடங்கப்படும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்! #NowAtVikatan

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

ரேஷன் கடை முன் பெண்கள்

தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 32 மாவட்டங்களில் இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் இதைத் தொடங்கி வைக்கிறார்.

Also Read: கரூர்: `கிடைத்தது ரேஷன் கார்டு... வாழ்நாளுக்கும் மறக்க மாட்டேன்!' - நெகிழும் மாரியப்பன்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 63,12,584-ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா பரிசோதனை

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,179 மரணங்கள் கொரோனா பாதிப்பால் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 98,708-ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 52,73,201பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/01-10-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக