Ad

சனி, 26 செப்டம்பர், 2020

'இதயத்தைக் காப்போம்' - இதய ஆரோக்கிய சிறப்பு நிகழ்ச்சி #WorldHeartDay

இதயத்தின் துடிப்புதான் வாழ்வின் துடிப்பு. ஒவ்வொருமுறை துடிக்கும்போதும், ரத்தமும், அதனுடன் சேர்ந்து பிராணவாயுவும், ஊட்டச்சத்துகளும் ஹார்மோன்களும் நம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் இதயமானது, ஒரு சராசரி மனிதரின் வாழ்நாளில் மட்டும் கிட்டத்தட்ட 250 கோடி முறை துடிக்கிறதாம்!

இதய ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் செப்டம்பர் 29-ஆம் தேதியை 'சர்வதேச இதய தின'மாக அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். 2020ஆம் ஆண்டின் சர்வதேச இதய தினம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது, காரணம் கோவிட்-19. பேரிடர் நோய்க் காலமான இந்நேரத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் அதிக அக்கறை செலுத்தவேண்டியுள்ளது. 'இதயத்தால் இதய நோய்களை வெல்வோம்' ('Use your heart to beat CVD (cardiovascular diseases))' என்பது இந்த வருட இதய தினத்தின் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதய நோய் வரக் காரணம் என்ன?

ஒருவருக்கு இதய நோய் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். உலகம் தழுவிய ஆய்வுகளில், புகைப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவையே இதய நோயை ஏற்படுத்தும் முதன்மை காரணிகளாக சொல்லப்படுகின்றன.

ஆரோக்கியமும் பொருளாதாரமும் ...

இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் இதய நலம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதும், அனைவருக்கும் நவீன மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகளாக இருக்கின்றன. இதய நல சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள அதிக பணம் தேவைப்படுவதாலும், இதய நோயால் உற்பத்தித்திறன் குறைவதாலும், இதயத்தின் நலம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார நலத்தோடு தொடர்புடையதாகவே இருக்கிறது.

காளீஸ்வரி ஃபவுண்டேஷன் வழங்கும் 'இதய நல' விழிப்புணர்வு நிகழ்ச்சி

'அருள் பொருள்' எனும் தலைப்பில் பல நற்காரியங்களைச் செய்துவரும் காளீஸ்வரி ஃபவுண்டேஷன், சர்வதேச இதய தினத்தை முன்னிட்டு 'இதயத்தைக் காப்போம்' எனும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. செப்டம்பர் 27, 28 மற்றும் 29 அன்று நடைபெறும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் மருத்துவ நிபுணர்கள் இதய நலம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட அறிவுரைகளை வழங்க இருக்கின்றனர்.

மூன்று நாள் நிகழ்ச்சிப் பட்டியல்

செப் 27 (ஞாயிறு), காலை 11.00 - 'இதயத்தைக் காத்திட உணவும் உடற்பயிற்சியும்'; வழங்குபவர்: டாக்டர் கௌசல்யா நாதன், வாழ்வியல் நல ஆலோசகர்

செப் 28 (திங்கள்), காலை 11.00 - 'கொரோனா காலத்தில் இதய நலன் மேலாண்மை'; வழங்குபவர்: டாக்டர் ஆனந்த் சுப்பிரமணியன், மூத்த ஆலோசகர் - இன்டெர்வென்ஷனல் கார்டியாலஜி, காவேரி மருத்துவமனை

செப் 29 (செவ்வாய்), காலை 11.00 - 'பெண்கள் நலம்'; வழங்குபவர்: டாக்டர் சுஜாதா ரஜினிகாந்த், பெண்கள் நல சிறப்பு மருத்துவர் மற்றும் தலைவர், பெண் நலம் மருத்துவமனை

மருத்துவர்களின் உரையை வாசகர்கள் அனைவரும் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் கேட்டு பயன்பெறலாம். இதயம் வளர்ப்போம், இன்பமாய் வாழ்வோம்!

பதிவு செய்ய க்ளிக் செய்க... https://forms.gle/gexWZdJsYZ2vbfEc6



source https://www.vikatan.com/news/miscellaneous/kaleesuwari-foundation-world-heart-day-seminar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக