சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த செல்லப்பனேந்தலை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றிவருகிறார். இவரின் மகள் சுபிக்ஷா (15). மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்தாண்டு 10-ம் வகுப்பு செல்ல இருந்தார். மாணவி சுபிக்ஷா தினமும் மதுரைக்கு அரசுப் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். பள்ளி மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட வெவ்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு நபர்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி மதுரை மாவட்ட அளவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் சரிவர புரியவில்லை என தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் தொடக்கத்தில் இருந்தே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்துள்ளார். பொதுத்தேர்வில் வெற்றி பெற முடியாமல் போய்விடுமோ, மதிப்பெண் குறைந்து விடுமோ என மன கவலையில் இருநத் அவர் தனது தாயாரின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை சத்திய மூர்த்தி காவல்துறையினரிடம் கூறுகையில், "தொடர்ந்து என் மகள் ஆன்லைன் கிளாஸ் எரிச்சலாக இருக்குனு சொல்லி வந்தா.. போக, போக சரியாகிவிடும் என்று தெரிவித்தோம்.
அதன்பின் இயல்பாக இருந்தாள். என் ஆட்டோக்கு எப்.சி எடுத்துட்டு குடும்பத்தோட பிரியாணி சாப்பிட்டோம். பின்னர் எல்லோரையும் வீட்டில் விட்டுவிட்டு திருப்புவனம் போய்டேன். அப்போது என் மகள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக கூறினார்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவள் இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்" எனக்கூறி கதறியுள்ளார்
source https://www.vikatan.com/news/crime/school-student-suicide-over-online-class-issue-in-sivagangai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக