இன்றைய மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், 80'ஸ், 90'ஸ், 2k கிட்ஸ் என யாரைக் கேட்டாலும், பள்ளிப்பருவத்தில் கணக்குப் பாடத்திற்கும் அவர்களுக்கும் தொடர்புடைய ஒரு பெரிய கதை இருக்கும். அல்ஜீப்ரா என்றதும் அலறாதவர்கள் ரொம்ப கம்மி. சிறு வயது முதலே கணக்கு எனும் பாடத்தைப் பெரும் பாரமாக, பூதமாக பயத்துடன்தான் பலர் அணுகியிருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்குக் கணக்குப் பாடத்தை ரசிக்கும்படி சொல்லித்தர முடியும் என்கிறார் பிரைன்கார்வ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பரமேஷ்வரி.
பிரைன் கார்வ் (Brain Carve) நிறுவனத்தின் மூலம் குழந்தைகளின் மூளைத்திறன் வளர்ச்சி அதிகரிக்க பயிற்சி அளித்துவருகிறார் டாக்டர் பரமேஸ்வரி. வேதிக் மேத்ஸ் (Vedic Maths), அபாகஸ் என மிக வித்தியாசமான பாடத் திட்டங்களோடு, இளம் வயது மாணவர்களுக்கு மிக எளிதாக, சுவாரஸ்யமாகக் கணக்குப் பாடம் கற்றுக்கொடுக்கிறார் டாக்டர் பரமேஷ்வரி.
உங்கள் குழந்தைகளும் கணக்குப் பாடம் என்றால் எக்ஸ்ட்ரா குஷியாகப் படிக்க வேண்டுமா? விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் கணக்கு போடும் கலையை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமா? இதோ அதற்கான வழி...
ஆனந்த விகடன் மற்றும் பிரைன் கார்வ் இணைந்து, `கணக்கு இனி கசக்காது' எனும் ஆன்லைன் கட்டணமில்லா வகுப்புகள் நடைபெற இருக்கின்றன. இந்த வகுப்புகளில் நான்காம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
கணக்குகளை எளிதாகப் புரிந்துகொள்ளுதல், விரல்களைக் கொண்டே பெரிய கணக்குகளுக்கு விடைதேடுதல், கணக்குகளை எளிதாகப் போடும் படிநிலைகள் எனப் பலவற்றைக் கற்றுக்கொள்வார்கள் உங்கள் வீட்டுச் செல்வங்கள்.
இந்நிகழ்ச்சி குறித்து விளக்கும் டாக்டர்.பரமேஸ்வரி, "புத்திசாலித்தனம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் கடவுள் கொடுத்த வரம் இல்லை, அது இளம் வயதில் முறையான பயிற்சி மூலம் நாம் வளர்த்துக்கொள்ளக்கூடிய திறமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இரு கை விரல்களையும் பயன்படுத்தி ஜாலியாக குழந்தைகள் கணக்கு பயிலும்போது, அவர்கள் மூளையின் இடது, வலது இரண்டு பக்கமும் வேலை செய்யும், இது அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்" என்கிறார்.
உதாரணத்திற்கு, 4567 x 9999, இதற்கு விடைகண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ஒரே விநாடியில் இவ்வளவு பெரிய கணக்கை எளிதாகப் போட முடியும். சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? உங்கள் குழந்தைகளுக்கு இந்த வித்தியாசமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்.
கணக்கில் புலியாக மாற வலுவான அடித்தளமாக விளங்கும் இந்த வகுப்புகள். 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். 19.09.2020 (சனிக்கிழமை), நேரம் மாலை 6 மணி முதல் 7 மணிவரை. அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.
கலந்துகொள்ள இந்த லிங்க்கில் பதிவு செய்துகொள்ளவும்: https://bit.ly/3k3qiyF
source https://www.vikatan.com/news/education/learn-easy-and-fun-maths-online-workshop-by-ananda-vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக