கடந்த வாரம், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 41-வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், 'கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. 'இது கடவுளின் செயல்'. நடப்பு நிதியாண்டில் அதன் தாக்கத்தை நாம் உணர்வோம்” என்று தெரிவித்திருந்தார்.
`இந்த பெருந்தொற்று 'கடவுளின் செயல்' என்றால், பேரிடருக்கு முந்தைய காலங்களில், பொருளாதாரங்களில் தவறான நிர்வாகத்தை எவ்வாறு விவரிப்பது. கடவுளின் தூதராக நிதி அமைச்சர் தயவுசெய்து பதிலளிப்பாரா?" எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்று 2020-21-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி தரவுகளை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளின் இல்லாத அளவிற்கு 23.9 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.
இதையடுத்து நிர்மலா சீதாராமன் இந்தியப் பொருளாதாரம் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. 'இது கடவுளின் செயல்' என்று கூறியதை விமர்சிக்க ஆரம்பித்ததோடு. #ResignNirmala ஹேஷ்டேக் டிரெண்ட் ஆக்கினார் நெட்டிசைகள்.
'சுதந்திர இந்திய வரலாற்றில் மிக மோசமான அளவுக்கு, ஜிடிபி 24 சதவிகிதம் குறைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் எச்சரிக்கைகளைப் புறக்கணித்தது..' என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-reason-for-resignnirmala-trend-on-twitter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக