Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

`அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்!’ - கமலா ஹாரிஸை விமர்சித்த அதிபர் ட்ரம்ப்

கொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், தேர்தல் பணிகள் எந்த குறையும் இன்றி வேகம் எடுத்திருக்கிறது. அதிபர் ரேஸில் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருக்க, துணை அதிபர் போட்டியில் இந்திய வம்சாவளி பெண்மணியான கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

டொனால்டு ட்ரம்ப்

இந்த தேர்தலில் கமால ஹாரிஸ் வெற்றிபெற்றால், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற மகத்தான சாதனையை பெற்றவராவார். மேலும் முதல் இந்தியா வம்சாவளி பெண் துணை அதிபர் என்ற சாதனையையும் பதிவு செய்வார். இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப், கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Also Read: US Election: `நிறவெறிக்கு எந்தத் தடுப்பூசியும் கிடையாது!’ - ட்ரம்பை விமர்சித்த கமலா ஹாரிஸ்

முன்னதாக கொரோனா தடுப்பு விவகாரத்தில் ட்ரம்ப் தோற்று விட்டதாக கமலா ஹாரிஸ் விமர்சித்திருந்தார். அவரிடம் இந்த வைரஸை தடுக்க எந்த திட்டமும் இல்லை எனவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த சூழலில், கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ட்ரம்ப். ``அமெரிக்க மக்கள் கமலா ஹாரிஸை விரும்பவில்லை. அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக நிச்சயம் அவர் தேர்ந்தெடுக்கப்படமாட்டார். மீறி, அவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றால், அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானமாக அமையும். கமலா ஹாரிஸின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அமெரிக்கர்களால் அவரை ஏற்றுகொள்ள முடியாது” என்றார். ட்ரம்ப்-ன் இந்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தொடர்ந்து சீனாவுடனான் உறவு குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், ``சீனாவுடன் மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஆனால் அந்த மை காயும் முன்னரே, கொரோனா என்னும் தொற்று வந்துவிட்டது. அதனால் அந்த வர்த்தக ஒப்பந்தத்தை முன்பு போல் இல்லாமல் வேறு மாதிரி பார்க்கிறேன்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/trump-slams-kamala-harris-in-election-campaign

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக