Ad

புதன், 16 செப்டம்பர், 2020

கோவை: உத்தரவிட்ட அரசு... உதவி செய்த சமூக ஆர்வலர்! - நிறைவேறியது பழங்குடிகளின் கனவு

கோவை மாவட்டம், ஆனைகட்டி கண்டிவழி மலை கிராமத்தில் சுமார் 25 பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு பெய்த மழையில் அங்கு பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துவிட்டன. இதையடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மழை காரணமாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டார்.

பழங்குடி கிராமம்

Also Read: `தூங்குறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி எங்களைப் பத்தி யோசிங்க!' - கண்ணீரில் ஆனைமலைப் பழங்குடி மக்கள்

அப்போது, பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டுமென அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, 13 வீடுகள் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, ஐந்து வீடுகளுக்கு தலா இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வீதம் ஒதுக்கபட்டது. ஆனால், வீடு கட்ட அந்த நிதி போதவில்லை. இதனிடையே, ஆனைகட்டி பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் ஜோஸ்வா அந்த மக்களுக்கு உதவி செய் முன் வந்தார். அவரது முயற்சிக்கு பலனும் கிடைத்தது.

பசுமை வீடு

சில நல் உள்ளங்கள் செய்த உதவியால், பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு அந்த 5 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் 320 சதுர அடி பரப்பளவில் அந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகளுக்கு கிரஹப்பிரவேசம் நடத்தி, பழங்குடி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

“நாங்க இருந்தது எம்.ஜி.ஆர் காலத்து வீடு. மழைல சேதமாகி, தங்கக் கூட இடமில்லாம இருந்தோம். பெரிய மனசு செஞ்சு, அரசு உத்தரவு போட்டாலும் பணம் பத்தல. நல்ல மனுசங்க உதவியால இப்ப கான்கிரீட் வீட்ல இருக்கோம். எங்களுக்கு உதவி செஞ்ச எல்லோருக்கும் நன்றி” என்று அந்த மக்கள் கூறியுள்ளனர்.

திறப்பு விழ◌ா

தற்போது, ஐந்து வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ள நிலையில் மீதம் உள்ள வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், இதே போல தங்களுக்கும் பசுமை வீடுகள் கட்டி தர வேண்டும் என்று ஆனைகட்டி சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் 18 பழங்குடி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-tribes-got-new-green-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக