50 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 50,20,360 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,290 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ளன. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள், 82,066 -ஆக அதிகரித்துள்ளன.
இந்தியாவில் இதுவரை 39,42,361 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். 9,95,933 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
அமெரிக்கா: 2 லட்சத்தை கடந்த மொத்த உயிரிழப்புகள்!
உலகளவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் மேலும், பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்களிடையே காணப்படுகிறது. உலகளவில், தினசரி ஏற்படுகிற பாதிப்பில் கடந்த சில நாள்களாகவே இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. நேற்று இந்தியாவில் மட்டும் 91,120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் 36,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்திருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் 2,00,197 பேர் தொற்று பாதிப்பு காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 67,88,147 ஆக உள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/16-09-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக