Ad

சனி, 12 செப்டம்பர், 2020

திருச்சி: 400 ஆபாச வீடியோக்கள்... பெண் வாடிக்கையாளர்கள் டார்கெட்! - சிக்கிய வங்கி ஊழியர்

வங்கிக்கு வரும் பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி அந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வங்கி கேஷியர் எட்வின் ஜெயக்குமாரை சிறையில் அடைத்துள்ளனர் திருச்சி போலீஸார். ஆபாசப் படங்கள் ஏற்றி வைத்த லேப்டாப், சிடி மற்றும் ஹார்டு டிஸ்க்கை எங்குப் பதுக்கி வைத்துள்ளார் என்ற தகவலை அறிய அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

வங்கி கேஷியர் எட்வின் ஜெயக்குமார்

யார் இந்த எட்வின் ஜெயக்குமார்?

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவர் புதுக்கோட்டை அருகேயுள்ள விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் கேஷியராக பணிபுரிந்த போது, இவருக்கும் தஞ்சை மாவட்டம் ரெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் ஆனது. திருமணமான நாளிலிருந்து எட்வின் ஜெயக்குமார் தன் மனைவியுடன் பழகுவதைத் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அத்தோடு தொடர்ந்து அவர் செல்போனிலேயே மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருந்த நிலையில், கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவரின் மனைவி, எட்வின் ஜெயக்குமாரின் பீரோவைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அதில் 12 செல்போன்கள் மற்றும் லேப்டாப் சிக்கியது. அந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப்களில் பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் நெருக்கமாக இருக்கும் வீடியோ இருந்தது. அத்தோடு பல பெண்களிடம் தவறாகப் பேசிய ஆடியோ மற்றும் ஷார்ட்டிங் மெசேஜ் இருந்துள்ளது.

ஆபாச வீடியோ

இதனைக்கண்ட அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து, கடந்த பிப்ரவரி மாதம், அப்போதைய தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதனிடம் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் எட்வின் ஜெயக்குமார் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை தன் தந்திரமான பேச்சால் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அவர்களுடன் தவறாக நடந்து கொண்டதையும் அதை வீடியோவாக எடுத்து வைத்து ரசித்து வந்ததோடு, பிரச்னை செய்யும் பெண்களிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டியிருக்கிறார் என்பதும் அப்போது தெரியவந்தது.

இதுகுறித்து தஞ்சை போலீஸார் எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிந்தனர். இதற்கிடையே இந்த வழக்கு தஞ்சை மாவட்டம் வல்லத்திலிருந்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் எட்வின் ஜெயக்குமார் ஜாமீன் பெற்றுக் கொண்டு குடும்பத்தோடு தலைமறைவானார்.

எட்வின் ஜெயக்குமார்

இந்நிலையில் எட்வின் ஜெயக்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில் நேற்று முந்தினம் அதிகாலை திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்குச் சென்ற தனிப்படை போலீஸார் பதுங்கியிருந்த எட்வின் ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி போலீஸார்

கைது செய்த போலீஸார் வட்டாரத்தில் பேசினோம். ``எட்வின் ஜெயக்குமார் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அந்த பெண்களுடன் தனிமையில் இருப்பது போன்ற போட்டோஸ், 400-க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்துவைத்திருக்கிறார். வழக்கு நடந்துகொண்டிருந்த நேரத்தில் பெயில் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் தலைமறைவானார். அவரை பல மாதங்களாக தேடிவந்தோம்.

திருச்சி போலீஸார்

இந்நிலையில் அவர் செல்போனை டிரேஸ் பண்ணியதில் அவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு லாட்ஜில் இருப்பது தெரியவந்தது. அவரை அங்கு வைத்து கைது செய்தோம். இந்நிலையில், அவர் எத்தனை பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தார். ஆபாசப் படங்கள் ஏற்றிய லேப்டாப் மற்றும் சிடி ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை எங்குப் பதுக்கி வைத்திருக்கிறார் என்ற எந்த விவரத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இது குறித்து அறிய போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.



source https://www.vikatan.com/news/crime/trichy-bank-employee-arrested-by-police-in-cheating-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக