Ad

வியாழன், 20 ஜூலை, 2023

``குடிகாரர்களை இனி மது தியாகிகள் என அழைக்கலாம்!" - செல்லூர் ராஜூ கல கல

மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செல்லூர் ராஜூ பேசும்போது, ``ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டியது போல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மடம் கட்டி வருகிறார்கள். 26 கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் முடிவுகள் எடுக்கவில்லை.

ஆர்பாட்டம்

கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்க முடியவில்லை, எதிர்கட்சிகள் கூட்டணி நெல்லிக்காய் மூடை கூட்டணி, சரிந்து ஒடி விடும், திமுக கூட்டணி கட்சிகள் ஒன்று, இரண்டு சீட்டுக்காக வாய் மூடி மெளனம் காத்து வருகிறார்கள்.

தமிழக அமைச்சர்கள் எப்போது ரெய்டு வரும் என தூக்கமில்லாமல் தவித்து வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.

ஆர்பாட்டம்

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை வரவேற்கிறேன். ஆனால் அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும், திமுக அரசு பேசுவது ஒன்று, செயல்படுத்துவது ஒன்று.

குடிகாரர்களை இனி குடிகார்கள் என அழைக்க கூடாது என அமைச்சர் முத்துச்சாமி சொல்கிறார். குடிகார்களை மது தியாகிகள் என அழைக்கலாம். வேலைப்பளுவால் குடிப்பதை தவறாக சொல்லக் கூடாது என்று அமைச்சர் முத்துச்சாமி கூறுகிறார். அவருக்கும்தான் வேலைப்பளு இருக்கும், அவர் குடிப்பாரா? நான் சின்ன வயசுல பார்த்த மாதிரியே அப்படியே இருக்கார் அவர்.

ஆர்பாட்டம்

முதல்வர் ஸ்டாலின் வடிவேலின் சூனாபானா கேரக்டர் போல வெளியே பேட்டி கொடுக்கிறார். உள்ளே நடுங்குகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு பில்டிங் ஸ்டார்ங், பேஸ்மட்டம் வீக். ஊழலுக்காக கலைஞர் வழியில் ஸ்டாலின் ஆட்சி கலைக்கப்படும்" என பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sellur-raju-speech-at-madurai-admk-protest-on-price-hike

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக