Ad

வியாழன், 20 ஜூலை, 2023

ட்ராப் ஷாப்பிங்... ஆன்லைன் பிசினஸில் அசத்த எளிய வழி! நிவேதா முரளிதரன் எழுதும் ஆன்லைன் பிசினஸ் - 3

ஆன்லைன் பிசினஸ் பற்றி கடந்த இரு வாரமாக எழுதி வருகிறேன். (கடந்த வார அத்தியாயங்களைப் படிக்க நினைப்பவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கலாம்..)

கடந்த வார அத்தியாயங்களைப் படித்து பலரும் பல சந்தேகங்களை எழுப்பி மெயில் (navdesk@vikatan.com, newgenaccs@gmail.com) அனுப்பி இருக்கிறார்கள். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அடுத்த வாரம் முதல் பதில் சொல்ல ஆரம்பிக்கிறேன். இனி இந்த வார அத்தியாயத்தைப் பார்ப்போம்.

இ-காமர்ஸ் எக்ஸ்பர்ட் நிவேதா முரளிதரன்

இ-காமர்ஸ்-ன் ஓர் அங்கம் `ட்ராப்-ஷிப்பிங்’

இ-காமர்ஸின் சிறப்பம்சம் என்னவெனில், ட்ராப்-ஷிப்பிங் (Drop Shipping) என்று சொல்லலாம். அது என்ன ‘ட்ராப்-ஷிப்பிங்’ என்று கேட்கிறீர்களா? சிம்பிள், உங்களிடம் பொருளே இல்லாமல்கூட, நீங்கள் பணம் சம்பாதிக்க வாய்ப்பு அளிப்பதுதான் ‘ட்ராப் ஷிப்பிங்’ எப்படி?

முதலில் நீங்கள் விற்க விரும்பும் பொருளைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின் அந்தப் பொருளுக்கான தயாரிப்பாளர் அல்லது மொத்த விற்பனையாளரைத் தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு ஓர் ஆர்டர் வந்தவுடன், உங்கள் தயாரிப்பாளர் அல்லது விற்பனையாளருக்கு நீங்கள் ஆர்டர் விவரம் கொடுத்தால், அவர் உங்கள் வாடிக்கையாளர் வீட்டுக்கு பொருளை அனுப்பிவிடுவர். இதுதான், `ட்ராப் ஷிப்பிங்’. அதாவது, பொருளைத் தயாரித்துத் தருபவருக்கு உங்கள் மூலம் ஒரு ஆர்டர் கிடைப்பதுதான் இது. நீங்கள் சோஷியல் மீடியாவில் நன்கு பிரபலமாக விளங்குபவர் எனில், உங்களால் எளிதாக ஆர்டர் பிடித்துத் தந்து, சம்பாதிக்க முடியும்.

பணம்

அதிக முதலீடு தேவையில்லை!

இந்த முறையில் நீங்கள் பிசினஸ் செய்ய உங்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை. பொருட்களை வாங்கி, அவற்றைப் பாதுகாக்க இடம் தேவையில்லை. பல்வேறு வழிகளில் ட்ராப்-ஷிப்பிங் மூலம் வணிகம் புரியலாம்.

வாட்ஸ்-அப் இருந்தால் போதும்...

சிலர் தங்களது வாட்ஸ்-அப்-ல் பொருட்களின் புகைப்படங்களைப் பதிவு செய்வார்கள். உண்மையில் அவர்களிடம் அந்தப் பொருள் இருக்காது. அதைப் பார்த்துவிட்டு யாராவது கேட்டால், அவரது விவரத்தை பொருளின் உற்பத்தியாளர் அல்லது தயாரிப்பாளருக்கு அனுப்புவர். அந்த தயாரிப்பாளர், பொருளைக் கேட்ட வாடிக்கையாளரின் முகவரிக்கு, பொருளை அனுப்பிவைப்பார். இது சுலபமான முறை. நமக்குரிய கமிஷனும் சரியாக வந்துவிடும்.

இதற்கு மீஷோ போன்ற வலைதளங்கள் உதவுகின்றன. பொருட்களின் விலையையும் நீங்களே தீர்மானிக்கலாம். மீஷோ வலைதளத்திலிருந்து பொருளின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதை உங்கள் உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் பகிரலாம்.

வாட்ஸ்- அப்

மற்றொரு சிறந்த வழி, ஷாப்பிஃபை Shopify. இதில் உங்கள் ஆன்லைன் ஸ்டோரைத் தொடங்கலாம். ஷாப்பிஃபை மூலம் ட்ராப்-ஷாப்பிங் செய்பவர்கள்தான் இந்தியாவில் அதிகம்.

ஷாப்பிஃபை-ல் விற்பனை செய்ய முதலில் டொமைன் (Domain, அதாவது, வலைதள முகவரி) உருவாக்க வேண்டும். பின்னர் வலைதளம் உருவாக்க ஷாப்பிஃபை, ஜோஹோ போன்ற வலைதளக் கட்டுமானவர்களை அணுகவேண்டும். இதற்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.பர்சனல்

வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி?

நீங்கள் வலைதளம் மூலம் பொருட்களை விற்கும்போது, சில விஷயங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும். முதலில், உங்கள் வலைதளத்துக்கு வாடிக்கையாளர் வரவேண்டும். இதற்கு சிறந்த வழி, சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்வது. இதற்கு ஸ்மார்ட் போன்கள் போதும். சுலபமாக நமது வலைதளத்தை சமூகவலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்தலாம்.

வேலை + சைடு பிசினஸ்...

நம்பிக்கையே அடித்தளம்!

பொதுவாக, தெரிந்தவர்கள் வட்டாரத்தில் பொருட்களை விற்பது சுபலம். அதே சமயம், முன்பின் தெரியாதவர்களிடம் பொருளை விற்பது சற்று கடினம். தற்போதைய சூழ்நிலையில், நிறைய போலி வலைதளங்கள் உள்ளன. எனவே, மக்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் உங்களுடைய வலைதளம் இருக்க வேண்டும். நம்பகத்தன்மை அதிகரிக்க, உங்கள் வலைதளத்தின் செல்போன் எண்ணைப் பதிவிடலாம். அப்போது, ஏதேனும் சந்தேகம் அல்லது பிரச்சினை வந்தால், உங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று மக்களிடம் நம்பிக்கை வரும்.

அதே போல, உங்களது முகவரி, எந்தெந்த முறைகளில் உங்கள் பொருட்களை எளிய வழியில் வாங்கலாம் போன்ற விவரங்களையும் பதிவிடுவது சிறந்தது.

பெரும்பாலானோர் வலைதளங்களில் சி.ஒ.டி (COD - Cash On Delivery) முறையையே தேர்வு செய்வார்கள். இம்முறையில் ஆர்டர் செய்பவர்களை ஒருமுறை தொடர்புகொண்டு, உறுதி செய்துகொள்வது அவசியம். ஏனெனில், சிலர் தெரியாமல் ஆர்டர் செய்வது, விளையாட்டாக ஆர்டர் செய்வது போன்றவற்றைச் செய்திருப்பார்கள். நீங்கள் உறுதி செய்துவிட்டு, பின்னர் உங்கள் தயாரிப்பாளர் அல்லது விற்பனையாளரிடம் சொன்னால், அவர்கள் அதை உரிய வாடிக்கையாளருக்கு கூரியர் செய்துவிடுவர்.

புடவை

புடவை   வேண்டாமே!

அதே போல, ட்ராப்-ஷாப்பிங்-கில் சில விஷங்களைக் கவனமாக மேற்கொள்ள வேண்டும். முதலில், எல்லாப் பொருட்களும் விற்பனைக்கு அல்ல என்பதை உணர வேண்டும். குறிப்பாக, புடவை போன்றவற்றை இதில் விற்பது சரியான தேர்வாக இருக்காது.

பொதுமக்கள் சமூகவலைதளங்களில் ஒரு விளம்பரத்தைப் பார்க்கும்போது, அந்தப் பொருள் அவர்களை ஈர்க்க வேண்டும். இதை வேறு எங்கும் வாங்க இயலாது என்று அவர்கள் உணர வேண்டும். அப்போதுதான், அவர்கள் உடனடியாக அந்தப் பொருளை ஆர்டர் செய்வார்கள். அதாவது, எளிதில் மக்களால் வாங்க இயலாத, ஆனால் அவர்களுக்குத் தேவைப்படும் பொருளாக இருப்பது நல்லது.

(அடுத்த வெள்ளிக்கிழமை அன்று சந்திப்போம்)



source https://www.vikatan.com/personal-finance/money/drop-shopping-the-incredibly-simple-way-to-online-business-online-business-by-nivetha-muralidharan-3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக