Ad

செவ்வாய், 25 ஜூலை, 2023

Doctor Vikatan: இரவில் மட்டும் படுத்தும் பல்வலி... என்னவாக இருக்கும்?

Doctor Vikatan: என் மனைவிக்கு வயது 54. பகலில் இயல்பாக இருக்கும் அவருக்கு இரவில் மட்டும் பல்வலி வருகிறது. இதற்கு ஏதாவது காரணம் உண்டா.... தீர்வு என்ன?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி.

பல் மருத்துவர் மரியம் சஃபி

உங்கள் கேள்வியில் உங்கள் மனைவியின் மருத்துவ வரலாறு, இதற்கு முன் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. ஏதேனும் பிரச்னைக்காக இப்போது மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறாரா என்றும் தெரியவில்லை.

அவருக்கு ஒரு பல்லில் மட்டும் வலி இருக்கிறதா அல்லது கீழ்த்தாடை மற்றும் மேல்தாடையிலும் வலி இருக்கிறதா என்ற தகவலும் இல்லை.

இரவில் மட்டும் பல்லில் வலியை உணர்வது 'பெரிடாண்ட்டிடிஸ்' (periodontitis) எனப்படும் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது அவரது ஈறு பலவீனமாக இருக்கலாம் அல்லது ஈறுகளுக்கு அடியில் உள்ள எலும்பு தேய்மானம் அடைந்திருநதாலும் வலி இருக்கலாம்.

எனவே நீங்கள் உங்கள் மனைவியை பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். ஒருவேளை அவருக்கு பெரிடாண்ட்டிடிஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டால், மருத்துவர் அவரின் பற்களைச் சுத்தப்படுத்திவிட்டு, ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைப்பார். அவற்றை எடுத்துக் கொண்டாலே வலி குறையும்.

பல் சிகிச்சை

ஒருவேளை ஒரே ஒரு பல்லில்தான் வலியை உணர்கிறார் என்றால் அதில் சொத்தை ஆழமாக இருக்கலாம். என்ன பிரச்னை என்பதை மருத்துவரால் நேரில் பார்த்துதான் சரியாகச் சொல்ல முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-toothache-that-only-occurs-at-night-what-could-it-be

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக