கோவை, சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்தக் கல்லூரி வளாகத்தைச் சுற்றி ஏற்கெனவே சுற்றுப்புற சுவர் இருந்த நிலையில், சுமார் 10 அடி உயரத்துக்கு புதிய சுற்றுப்புற சுவர் கட்டும் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை முதல் கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மாலை 5:30 மணியளவில் இந்தப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து, தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கண்ணையன், ஜெகநாதன், சச்சிம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விபிஸ் கோயாஸ் ஆகிய 4 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். படுகாயமடைந்த வருள் கோயாஸ் என்ற தொழிலாளி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“அலட்சியமாக இருந்த ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
source https://www.vikatan.com/crime/accidents/4-migrant-workers-died-in-coimbatore-krishna-college-after-wall-collapsed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக