Ad

செவ்வாய், 18 ஜூலை, 2023

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடந்த ஜூனில் வாங்கிய/விற்ற பங்குகள் என்னென்ன? IDBI தரும் ரிப்போர்ட்!

கடந்த ஜூன் மாதத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்து ஐ.டி.பி.ஐ கேபிடல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளில் 57,420 கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்துள்ளன. மேலும், 2,022 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன.

ஈக்விட்டி முதலீடுகளைப் பொறுத்தவரை, ஜூன் மாதத்தில் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகள் 5,664 கோடி ரூபாயைப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதே நேரம், ஜூன் மாதத்தில் எஃப்.ஐ.ஐ (FII) முதலீட்டாளர்கள் பங்குகளில் 55,160 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

ஸ்மால்கேப்

ஸ்மால்கேப் ஃபண்டுகளில் கொட்டும் பணம்

ஈக்விட்டி ஃபண்டுகளிலும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில்தான் அதிக முதலீடுகள் குவிந்துள்ளன. ஜூன் மாதத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் 5,472 கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்துள்ளன.

அடுத்ததாக, மிட்கேப் ஃபண்டுகளில் 1,749 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. லார்ஜ்கேப் ஃபண்டுகளில் இருந்து 2,050 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன. மல்டிகேப் ஃபண்டுகளில் 735 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன.

எஸ்.ஐ.பி முதலீடுகள்:

கடந்த ஜூன் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் 14,734 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. முந்தைய மே மாதத்தில் எஸ்.ஐ.பி முறையில் 14,749 கோடி ரூபாய் முதலீடுகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

புதிதாக வாங்கப்பட்ட பங்குகள்

கடந்த ஜூன் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கீழ்க்காணும் பங்குகளைப் புதிதாக வாங்கியுள்ளன.

என்.ஐ.ஐ.டி லேர்னிங் சிஸ்டம்ஸ் (NIIT Learning Systems),

ஐகியோ லைட்டிங் (IKIO Lighting),

ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி (Ideaforge Technology),

சையண்ட் டி.எல்.எம் (Cyient DLM),

கோல்டி பாட்டில் டெவலப்பர்ஸ் (Kolte-Patil Developers),

பி.டி.சி இண்டஸ்ட்ரீஸ் (PTC Industries),

தி அனுப் இன்ஜினியரிங் (The Anup Engineering),

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் அண்டு ரெக்டிஃபையர்ஸ் (Transformers & Rectifiers),

இந்தியன் மெட்டல்ஸ் & ஃபெரோ அலாய்ஸ் (Indian Metals & Ferro Alloys),

ஆனந்த் ராஜ் (Anant Raj),

அம்பிகா காட்டன் மில்ஸ் (Ambika Cotton Mills).

ஸ்மால்கேப்

மியூச்சுவல் ஃபண்டுகள் விற்ற பங்குகள்:

நெக்ஸஸ் செலக்ட் மால் மேனேஜ்மண்ட் (Nexus Select Mall Management),

சர்தா எனர்ஜி & மினரல்ஸ் (Sarda Energy & Minerals),

அக்சீல்யா சொல்யூஷன்ஸ் இந்தியா (Accelya Solutions India),

லைகா லேப்ஸ் (Lyka Labs),

ஆர்தி சர்ஃபாக்டண்ட்ஸ் (Aarti Surfactants),

புரவங்காரா (Puravankara),

ட்ரூகேப் ஃபைனான்ஸ் (TruCap Finance),

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Shipping Corporation of India),

எடல்வைஸ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் (Edelweiss Financial Services)

துறை ரீதியான முதலீடுகள்:

கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக ஏவியேஷன் துறையில் மியூச்சுவல் ஃபண்டுகள் தனது முதலீட்டை 13.7% அதிகரித்துள்ளது. ஏவியெஷன் துறையில் மட்டும் 8,813 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் ஏவியேஷன் துறையில் முதலீடுகள் 205.3% அதிகரித்துள்ளது. பிற துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்த விவரங்கள் இனி...

மியூச்சுவல் ஃபண்ட்

பேங்கிங் & ஃபைனான்ஸ் துறையில் 7,81,804 கோடி ரூபாய் (3.9%),

ஐ.டி துறையில் 2,42,647 கோடி ரூபாய் (1.8%),

ஆட்டோமொபைல் துறையில் 2,21,682 கோடி ரூபாய் (7.1%),

பார்மா துறையில் 1,78,836 கோடி ரூபாய் (8.4%),

ஆயில் & கேஸ் துறையில் 1,54,504 கோடி ரூபாய் (3.5%),

எஃப்.எம்.சி.ஜி துறையில் 1,42,222 கோடி ரூபாய் (3.2%),

ரீடெய்ல் துறையில் 51,035 கோடி (11.5%),

மெட்டல்ஸ் & மைனிங் துறையில் 61,326 கோடி ரூபாய் (11.2%),

பிளாஸ்டிக் துறையில் 15,979 கோடி ரூபாய் (10.4%),

வேளாண் துறையில் 9,062 கோடி ரூபாய் (8.1%),

மின்சாரத் துறையில் 56,401 கோடி ரூபாய் (7.2%),

இன்ஃப்ரா துறையில் 76,413 கோடி ரூபாய் (6.9%),

கேபிடல் குட்ஸ் துறையில் 72,370 கோடி ரூபாய் (6.6%),

டைமண்ட் & ஜுவல்லரி துறையில் 15,673 கோடி ரூபாய் (6.3%),

கன்ஷூமர் டியூரபிள்ஸ் துறையில் 41,713 கோடி ரூபாய் (5.5%),

டெலிகாம் துறையில் 59,535 கோடி ரூபாய் (4.7%),

ரியால்டி துறையில் 23,239 கோடி ரூபாய் (4.4%),

கன்ஸ்ட்ரக்‌ஷன் மெட்டீரியல்ஸ் துறையில் 64,457 கோடி ரூபாய் (3.1%),

கெமிக்கல்ஸ் % ஃபெர்டிலைசர்ஸ் துறையில் 84,005 கோடி ரூபாய் (2.9%),

டெக்ஸ்டைல் துறையில் 19,038 கோடி ரூபாய் (2.7%),

ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் துறையில் 22,044 கோடி ரூபாய் (2.4%),

மீடியா துறையில் 10,372 கோடி ரூபாய் (-6.6%),

பேப்பர் துறையில் 628 கோடி ரூபாய் (-9.5%) முதலீடுகள் வந்துள்ளன.

முதலீட்டின் அளவு அடிப்படையில், அதிகபட்சமாக பேங்கிங் & ஃபைனான்ஸ் துறையிலும், அதற்கடுத்து ஐ.டி துறையிலும், அதற்கடுத்து ஆட்டோமொபைல் துறையும் உள்ளன.



source https://www.vikatan.com/personal-finance/share-market/what-stocks-were-boughtsold-by-mutual-fund-companies-last-june-report-from-idbi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக