Ad

சனி, 8 ஜூலை, 2023

Doctor Vikatan: இரணட சறநரகஙகளம பழதன நலயல சதத மரததவம தரவ தரம?

Doctor Vikatan: எனக்கு இரண்டு கிட்னியும் பழுதாகிவிட்டது. இந்தப் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா... கிட்னி பழுதுக்கு மூக்கிரட்டை கீரை சாப்பிடலாமா... அலோபதி மருந்துகளுடன் சேர்த்துச் சாப்பிடலாமா?

Null, விகடன் இணையத்தில் இருந்து...

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

நீங்கள் முதலில் நம்பகமான சித்த மருத்துவரை நாடுங்கள். உங்கள் நாடி பிடித்துப் பார்த்துவிட்டு, வாதம்- பித்தம்- கபம் அளவுகளுக்கேற்ப உங்களுக்கான சிகிச்சையை முடிவு செய்வார். சிகிச்சை சாத்தியமில்லை என்ற நிலையில் அதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துவார்.

கிட்னி பழுதடைந்திருக்கிறது என்றால் அது எந்த அளவுக்குப் பழுதடைந்துள்ளது என்பதைப் பொறுத்தே சிகிச்சை அமையும். அதை உங்கள் மருத்துவர் முடிவு செய்வார். கிட்னி பாதிக்கப்பட்ட நபர், மூக்கிரட்டை கீரை சாப்பிடலாம். சிறுநீரகச் செயல்பாட்டை சீராக்குவதில் அபரிமிதமாக வேலை செய்யக்கூடியது இந்தக் கீரை.

உங்களுடைய பிரச்னைக்காக நீங்கள் அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், கூடவே நீங்கள் மூக்கிரட்டைக் கீரையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மூக்கிரட்டைக் கீரையை கஷாயமாக வைத்துக் குடிக்கலாம் அல்லது அதைக் காயவைத்துப் பொடித்து, தினமும் இருவேளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது கிட்னி ஸ்டோன்களை கரைக்கக்கூடியது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது. ஒட்டுமொத்த உடலுக்குமே புத்துணர்வு அளிக்கக்கூடிய கீரை இது.

சிறுநீரக நோயாளிகளுக்கு சத்துகளை உட்கிரகிப்பதில் பிரச்னை இருப்பதால், ரத்தச்சோகை பாதிப்பு வரும். மூக்கிரட்டைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சத்துகள் உட்கிரகிக்கப்படுவதும் மேம்படும். ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

மூக்கிரட்டை!

எனவே நீங்கள் உங்கள் விருப்பப்படி முதலில் சித்த மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள். அதுவரை அலோபதி மருந்துகளுடன் சேர்த்து மூக்கிரட்டை கீரையையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-both-kidneys-are-damaged-siddha-medicine-will-help

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக