பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு அம்பானி தங்கத் தொட்டிலை வழங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு ஜூன் 20 ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவை ஹைதராபாத்தில் உள்ள உபாசனாவின் தாய் வீட்டிலேயே நடத்தினர்.
இந்தப் பெயர்சூட்டு விழாவில், உபாசனாவின் பெற்றோர்களான ஷோபனா மற்றும் அனில் காமினேனி மற்றும் ராமின் பெற்றோர்களான சிரஞ்சீவி மற்றும் சுரேகா கொனிடாலா ஆகியோர் கலந்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். பிரபலங்கள் சிலரும் விருந்தினர்களாகப் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், விழாவில் பங்கேற்றவர்கள் யார் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதி தங்கள் மகளுக்கு க்ளின் காரா கொனிடேலா (Klin Kaara Konidela) என்று பெயரிட்டுள்ளனர். குழந்தையின் பெயர் இந்து மதத்தில் உள்ள புனித மந்திரமான லலிதா சஹஸ்ரநாமத்தால் ஈர்க்கப்பட்டு வைக்கப்பட்டதாகவும், `க்ளின் காரா’ என்பதற்கு `ஆன்மிக விழிப்புணர்வைக் கொண்டுவரும், மாற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் ஆற்றல்' என அர்த்தம் என்றும் தெரிவித்தனர்.
இந்தச் செய்தி வெளியான சில மணிநேரங்களிலேயே இந்திய பில்லியனர் தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி தம்பதியினர் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத் தொட்டிலைப் பரிசாக அளித்தனர் என்ற தகவல் பரவலாக வெளியானது. அந்தச் சிறிய தங்கத் தொட்டில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது.
ஆனால், இதுவரையில் பெயரிடும் விழாவில் அவர்கள் பங்கேற்றனரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
source https://www.vikatan.com/humour-and-satire/current-affairs/did-ambani-gave-golden-cradle-to-ram-charan-upasanas-baby-girl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக