Ad

திங்கள், 10 ஜூலை, 2023

ரகலன பத யததரய அணணமலயன நடபயணததடன ஒபபடவத?! - தரநவககரசர கடடம

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது அவர், ``ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆட்சியே போனாலும் கவலைப்பட மாட்டோம் எனக் கூறியிருப்பது அவரின் உறுதித்தன்மையைக் காட்டுகிறது. உறுதித் தன்மையைச் சொல்வதற்காகவே கூறியிருக்கிறார். ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் எனத் தெரிந்துதான், சொல்லியிருக்கிறார், என்றெல்லாம் நாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை.

முதலமைச்சர் விவரமாக அனுப்பியிருக்கும் அந்த கடிதம் குறித்து குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தாலும், ஏழை, எளியவர்களுக்கு அந்தப் பணம் போய் சேர வேண்டும் என்பதுதானே முக்கியம். இப்போது அரசிடம் இருக்கும் நிதியை வைத்து ஒரு கோடி பேருக்கு கொடுத்தால், நிதிநிலை சரியான பிறகு எல்லோருக்கும் கொடுக்கலாம். அப்படி கொடுத்தால் சந்தோஷம். அரசு நிதிநிலையை கவனத்தில் கொண்டு தான் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

மேக்கேதாடூ அணை விவகாரத்தில் கர்நாடகத்தில் யார் ஆளுகிறார்கள் என்பது பிரச்னை இல்லை. இது மாநிலங்கள் சம்மந்தப்பட்ட பிரச்னை. விவசாயிகள் பாதிக்கக்கூடாது. தமிழ்நாட்டின் உரிமைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் அத்திட்டத்தை உறுதியாக எதிர்க்கும்.

ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர். இதை தேர்தலுக்கு முன் பலரும் தேர்தலுக்கு பின் சிலரும் ஒப்புக்கொள்வார்கள்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரையினை அண்ணாமலையின் நடைப்பயணத்தோடு எப்படி ஒப்பிட முடியும். அவ்வாறு ஒப்பிடக்கூடாது. அது வேறு இது வேறு.

கடந்த 2 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை. அதற்கு கொரோனா தாக்கம் காரணமாகக் கூறப்பட்டது.

அதனால் ரூ. 10 கோடி நிதி கிடைக்காமல் போனது. இந்த ஆண்டுக்கான நிதி ரூ. 5 கோடி கிடைத்தால் தொகுதியின் வளர்ச்சிக்கு செலவு செய்யலாம். அதற்காக காத்திருக்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/thirunavukarasar-about-rahul-gandhis-path-yatra-and-annamalai-walk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக