Ad

வியாழன், 27 ஜூலை, 2023

புதுச்சேரி: அரைகுறை ஆடையுடன் இரவில் வீடியோ கால்; தாயைக் கொலைசெய்த மகனுக்கு ஆயுள் தண்டனை!

புதுச்சேரி, நெல்லித்தோப்பைச் சேர்ந்த ஜெயசேகர் என்பவருக்கு மூன்று மனைவிகள். 2013-ல் ஜெயசேகர் இறந்துவிட, இரண்டாவது மனைவியான ஜெயமேரி தன்னுடைய மகன் அமலோற்பவநாதனுடன் வசித்து வந்தார். அதையடுத்து ஜெயசேகரின் மூன்றாவது மனைவி செல்விக்கும், இரண்டாவது மனைவியான ஜெயமேரிக்கும் கணவரின் சொத்துகள் யாருக்கு என்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் ஜெயமேரி தன்னை எதாவது செய்துவிடுவாரோ என்று பயந்த செல்வி, கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க-விலிருந்த தன்னுடைய சகோதரன் மணவாளன் என்பவரை புதுச்சேரிக்கு அழைத்து தனது பாதுகாப்புக்காக வீட்டில் தங்கவைத்துக்கொண்டார்.  2014-ம் ஆண்டு அந்த மணவாளனை கூலிப்படையினர் மூலம் கடத்திக் கொலைசெய்தார் ஜெயமேரி. அந்த வழக்கில் ஜெயமேரி, பிச்சவீரன்பேட் பகுதியைச் சேர்ந்த ரௌடி சோழன் உள்ளிட்ட 8 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது காவல்துதுறை.

வீடியோ கால்

அதையடுத்து அந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜெயமேரி, கிருஷ்ணா நகரில் புதிய வீடு ஒன்றை வாங்கி தன்னுடைய மகன் அமலோற்பவநாதனுடன் குடியேறினார். படித்திருந்த அமலோற்பவநாதன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அதனால் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல சிறைக்குச் சென்று வந்த ஜெயமேரி, இரவில் ஆண் நண்பர்களுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்திருக்கிறார். அதைக் கண்டித்த அமலோற்பவநாதனுக்கும், ஜெயமேரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகும் ஜெயமேரி ஆண் நன்பர்களுடன் பேசுவதை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கிறார். 2019-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்ற அமலோற்பவநாதன், ‘ஒரு வாரத்தகு முன்பு என் அம்மாவைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டேன். அவரின் சடலத்தை வீட்டின் அறையில் பூட்டி வைத்திருக்கிறேன்’ என்று கூற, பணியில் இருந்த போலீஸார் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட போலீஸார் கொலை நடைபெற்ற பகுதி லாஸ்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், அவரை ஜீப்பில் அழைத்துச் சென்று லாஸ்பேட்டை போலீஸாரிடம் ஒப்பபடைத்தனர். அதையடுத்து அமலோற்பவநாதன் கூறிய வீட்டுக்குச் சென்றபோது, அங்கு கடுமையாக துர்நாற்றம் வீசியிருக்கிறது. அதன் பிறகு கிராம நிர்வாக அதிகாரி வரவழைக்கப்பட்டு, போலீஸார் குவிக்கப்பட்டு அந்த வீட்டை திறந்தனர். அங்கே அழுகிய நிலையில் ஜெயமேரியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``சிறைக்குச் சென்று வந்த ஜெயமேரிக்கு நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடன் பேசியது பிடிக்காமல் கண்டித்த அமலோற்பவநாதனுக்கும், ஜெயமேரிக்கு இடையே தினமும் சண்டை நடந்திருக்கிறது. 2019 மார்ச் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த அமலோற்பவநாதன், ஏதோ பேச்சுக் குரல் கேட்டு எழுந்திருக்கிறார். அப்போது தாய் ஜெயமேரியின் அறையிலிருந்து வெளிச்சம் வரவே, அங்கு சென்று பார்த்திருக்கிறார்.

அப்போது ஜெயமேரி ஆண் ஒருவருடன் அரைகுறை ஆடையுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்த அமலோற்பவநாதனுக்கு கடும் கோபம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அங்கிருந்த நாற்காலியால் தாய் ஜெயமேரி தலையில் அடித்திருக்கிறார். அதில் நிலைகுலைந்துபோன ஜெயமேரி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். அதிலும் ஆத்திரம் அடங்காத அமலோற்பவநாதன், சமையல் அறைக்குச் சென்று  கத்தியை எடுத்து அரைகுறை மயக்கத்தில் இருந்த ஜெயமேரியின் கழுத்தில் சரமாரியாக குத்தியிருக்கிறார். அதனால் அதே இடத்தில் துள்ளத் துடிக்க உயிரிழந்தார் ஜெயமேரி. பின்னர் அவரின் உடலை வேறு ஓர் அறைக்கு இழுத்துச் சென்று போட்டு பூட்டிய அமலோற்பவநாதன், அதன் பிறகு அதே வீட்டில் எப்போதும் போல சாப்பிட்டுக்கொண்டும், தூங்கிக் கொண்டும் இருந்திருக்கிறார். ஒரு வாரம் கடந்த நிலையில் துர்நாற்றம் வரவேதான் போலீஸில் சரணடைந்தார். அந்த வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது" என்றனர்.

புதுச்சேரி 3-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், தாயைக் கொன்ற அமலோற்பவநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி இளவரசன்.



source https://www.vikatan.com/crime/puducherry-court-has-sentenced-life-time-prison-to-the-son-who-killed-his-mother

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக