Ad

ஞாயிறு, 16 ஜூலை, 2023

திண்டுக்கல்: `நான்தான் டாக்டர்' - விசாரிக்க வந்த அதிகாரிகளிடமே அறிமுகம் செய்த போலி பெண் மருத்துவர்

​திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் ​வைத்து மருத்துவம் பார்க்கப்படுவதாகவும், அந்த வீடு ​கிளினிக் ​போல ​செயல்படுவதாகவும் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பூமிநாதன் தலைமையில் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் ஆகியோர் அந்த ​வீட்டில் ஆய்வு செய்தனர். 

மருத்துவம்

​அப்போது கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி, மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. ​இதையடுத்து ​​​மருத்துவ குழுவின​ர் அவ​ரிடம் ​விசாரணை நடத்தியபோது, முதலில் தன்னை தன்னை டாக்டர் என அறிமுகம் செய்து ​பேசியுள்ளார். அதிகாரிக​ளின் தொடர் விசாரணையில், ​​பள்ளி படிப்பை மட்டுமே படித்து​ள்ள ​கலாவதி(45)​  பல ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இவர் ஊசி மருந்து போட்டதுடன், காயங்களுக்கு கட்டு போட்டும், மருந்துகள் கொடுத்தும் வந்துள்ளார்.

​திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி, சாணார்பட்டி, சிறுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற போலி டாக்டர்கள் நடமாட்டம் அவ்வப்போது கண்டறியப்பட்டு அவர்களை கைது செய்து வருகின்றனர். கிளினிக் நடத்த வேண்டும் என்றால் முறையான படிப்பு முடித்து அரசால் அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த நடைமுறையும் பின்பற்றாமல் கிளினிக் நடத்துவதும், கிராமங்களுக்கு சென்றே சிகிச்சை அளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. 

போலி டாக்டர்

​இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீஸாரிடம் புகார் அளித்தனர். ​அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீஸார், கலாவதியை கைது செய்ததுடன் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். அவர் மருத்துவம் பார்த்ததன் மூலம் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்​.​



source https://www.vikatan.com/crime/fake-female-doctor-who-treated-at-home-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக