Ad

திங்கள், 7 செப்டம்பர், 2020

குன்னூர்: கண்ணெதிரே சரிந்த வீடு... ஆற்றில் கவிழ்ந்த வாகனங்கள்! - நிலைக்குலைந்த நகரம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கூடலூரில் கடந்த மாதம் கொட்டித் தீர்த்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆற்றில் கவிழ்ந்த வாகனங்கள்

நூற்றுக்கணக்கான யூகாலிப்டஸ் மரங்கள் பெயர்ந்து விழுந்ததில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கால்நடைகளும் உடல் நசுங்கி உயிரிழந்தன. மின்‌ துண்டிப்பு ஏற்பட்டு ஒரு வாரம் மாவட்டமே இருளில் மூழ்கியது.

இந்த பேரிடரில் இருந்து மீண்டு வரும் நீலகிரியில் பல பகுதிகளில் நேற்றும் பெருமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 184 மி.மீ. மழையும் அதற்கு அடுத்தபடியாக பந்தலூரில் 96 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக 28.07 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கண்ணெதிரே சரிந்த வீடு

31 மி.மீ மழையை மட்டுமே பெற்ற குன்னூர் நகரில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குன்னூர் வி.பி.தெரு பகுதியில் ஆற்றங்கரை தடுப்பு சுவரில் உடைப்பு ஏற்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் ஆற்றில் கவிழந்தன.

அதே போல் மேல் குன்னூர் அம்பேத்கர் நகர் பகுதியில் கலா என்பவரது வீடு இடிந்து விழுந்து முழுவதுமாக சேதடைந்தது. அதிர்ஷடவசமாக கலா உயிர் தப்பினார். கண்ணெதிரே வீடு இடிந்து விழுவதைப் பார்த்த மக்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது.

ஆற்றில் கவிழ்ந்த வாகனங்கள்

குன்னூர் மழை பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள், " நேற்று மாலை பெய்த மழையில் குன்னூர் நகரில் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை ஆய்வு செய்துள்ளோம் உரிய மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும்," என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coonoor-rain-cause-heavy-damage-in-city

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக