Ad

புதன், 16 செப்டம்பர், 2020

ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுளை ஆராதிக்கும் ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம்... நீங்களும் பங்கேற்கலாம்!

ஓம் நமோ பகவதே வாசுதேவாய

தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய

சர்வ ஆமய வினாஷாய த்ரைலோக்ய நாதாய

தன்வந்த்ரி மகாவிஷ்ணவே நமஹ

தனு என்றால் அம்பு, உடலைத் தைத்தல் என்ற இரண்டு பொருளுண்டு. இதனால் தன்வந்த்ரி என்கிற சொல்லுக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் எனப் பொருள் கொள்ளலாம். நான்முகன் உலகை சிருஷ்டித்ததும் உலக உயிர்கள் வாழும்பொருட்டு ஸ்ரீமன் நாராயணரால் உருவாக்கப்பட்டதே ஆயுர்வேதம். அதை உருவாக்கி எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டவர் ஸ்ரீதன்வந்த்ரி பகவான். 'தன்வன்' என்றால் பிரபஞ்ச வெளியில் உலவுபவர் என்றும் ஒரு பொருளுண்டு. பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம், மத்ஸ்ய புராணம் போன்றவை ஸ்ரீதன்வந்த்ரி பகவானின் அவதாரம் பற்றிச் சொல்கின்றன. மஞ்சள் ஆடையும் நெற்றியில் திருமண் அலங்காரமுமாக இந்த பகவான் விளங்குகிறார். நான்கு கரங்களும் கொண்டு விளங்குகிறார். பின்னிரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும், முன்னிரண்டு கரங்களில் அமிர்த கலசத்தையும், சீந்தலைக் கொடியையும் ஏந்திக் காட்சி அளிக்கிறார். சில இடங்களில் அட்டைப்பூச்சி, ஏட்டுச்சுவடி ஏந்தியும் காட்சி அருள்வார்.

தன்வந்த்ரி

சகலவித நோய்கள் மற்றும் குறைபாடுகளிலிருந்து நம்மைக் காத்தருளும் ஸ்ரீமஹா விஷ்ணுவின் மருத்துவ அவதாரமாகக் கருதப்படுபவர் ஸ்ரீதன்வந்த்ரி பகவான். பாற்கடலைக் கடைந்த பொழுது நோய்கள் தீர்க்கும் அமிர்த கலசத்துடன் தோன்றியவர் இவர். விண்ணவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் இவரை ஆன்மிக நூல்கள் கொண்டாடுகின்றன. இவரை ஆராதிக்கும் வகையில் நோய்கள் தீர, நோய்கள் குறித்த அச்சங்கள் அகல செய்யப்படுவதே ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம்.

இந்தப் பெருமைமிக்க ஹோமத்தைத் தனியே செய்ய அதிக செலவும் உழைப்பும் தேவைப்படும். எனவே சக்தி விகடனும் திருவடிசூலம் ஸ்ரீஆதி பரமேஸ்வரி ஸ்ரீகருமாரியம்மன் அறக்கட்டளையும் இணைந்து வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பூரண நலன் வேண்டி இந்த ஹோமத்தை நடத்தவுள்ளது. ஸ்ரீதன்வந்த்ரி ஹோமத்தில் பல அபூர்வ மூலிகைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. வேத சாஸ்திரங்களை நன்கு அறிந்துணர்ந்த, அனுபவம் வாய்ந்த சிரோன்மணிகளால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்பட உள்ளது.

ஹோமம் ’

பூரண ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரவல்ல இந்த ஹோமம் வரும் 27.9.2020 (புரட்டாசி - 11) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 முதல் 12 மணிவரை நிகழவுள்ளது. மகா தன்வந்த்ரி ஹோமம் நடைபெறவுள்ள இந்தத் திருநாள், பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாதம் - ஏகாதசி திதி- திருவோண நட்சத்திரம் மற்றும் அமிர்தயோகம் கூடிய உன்னதமான திருநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாட்டு வைபவங்களுக்குப் பன்மடங்கு பலன் உண்டு என்பது நிச்சயம்.

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். (தமிழ்நாடு - பாண்டிச்சேரி பகுதிகளுக்கு மட்டும்) இதனை உங்கள் பூஜை அறையில் வைத்தும், உங்கள் நெற்றியில் பூசிக்கொண்டும் இறைவனின் அருளைப் பெறலாம்.

அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியிருக்கும் ஆபத்பாந்தவனே, ஸ்ரீதன்வந்த்ரி, சகல நோய்களுக்கும் மருந்தாக, நோய்களைத் தீர்ப்பவராகவும் இருப்பவரே, மூன்று உலகிற்கும் அதிபதியான ஸ்ரீ மகாவிஷ்ணு பகவானே உன்னை மனதார வணங்குகிறோம். இந்த ஹோமத்தில் பங்குகொள்ளும் சகலரும் ஆரோக்கிய வாழ்வு பெற்று நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறோம்.

திருவடிசூலம்

நடைபெறும் தலம்:

சென்னை மகேந்திரா சிட்டியை அடுத்துள்ள செங்கல்பட்டு - திருவடிசூலம் சப்த சைலஜ ஶ்ரீபாதாத்ரி நூற்றெட்டு திவ்யதேசத்தில் (நடப்புச் சூழலில் உரிய விதிகளைப் பின்பற்றி) நிகழவுள்ள இந்த வழிபாடுகளில், வாசகர்கள் தங்கள் நலனுக்காகவும் பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களின் நன்மைக்காகவும் வேண்டிச் சங்கல்பித்து பலன் பெறலாம்.

நாள்: செப்டம்பர் 27, 2020 நேரம்: காலை 10.00 - 12.00

நேரில் தரிசிக்க இயலாத வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம - வழிபாட்டு வைபவங்கள் (29.9.20 செவ்வாய் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

கீழ்க்காணும் சங்கல்ப முன்பதிவுப் படிவத்தில் பெயருக்கான இடத்தில் தங்களின் நட்சத்திரத்தையும் சேர்த்துக் குறிப்பிடவும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களையும் குறிப்பிடலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 73974 30999 | 97909 90404.

இந்த ஹோமத்தில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...



source https://www.vikatan.com/spiritual/functions/participate-in-dhanvantari-homam-conducted-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக