Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் ஆர்ட்ஸ் & சயின்ஸ் படிப்புகள் - ஆனந்த விகடனின் ஒரு ஸ்மார்ட் வழிகாட்டல்!

மருத்துவம், பொறியியல் என தேடித்தேடி படித்த மாணவர்களுக்கிடையில், தற்போது கலை மற்றும் அறிவியல் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் இருக்கும் மிகப் பெரிய சவால் ’எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது, எங்கு படிப்பது?’ என்பதே.

ஆனந்த விகடனின் ஒரு ஸ்மார்ட் வழிகாட்டல்

ஒரு மாணவனுக்கு பிளஸ் 2 மதிப்பெண் போலவே, மேற்படிப்புக்காக தேர்வு செய்யும் கல்லூரியும், துறையும் மிகவும் அவசியம். சமீபகாலமாக, அதிகக் கட்டணம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளால் பொறியியல் படிப்பின் மீதான மோகம் மாணவர்களிடையே பெரிதும் குறைந்துகொண்டு வருகிறது.

அதேநேரம் கலை அறிவியல் படிப்புகள்மீது கவனம் திரும்பியிருக்கிறது. ஆனால் கலை அறிவியல் படிப்புகளை எங்கு படிக்கலாம், அதில் எந்தத் துறை சிறப்பானது என்ற சந்தேகம் மாணவர்களிடையே இருந்துகொண்டுதான் இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறார் ஜெயபிரகாஷ் காந்தி. இத்துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும், எதிர்காலமுள்ள படிப்புகள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கவிருக்கிறார்.

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்பது அத்துறையின் மீதான மாணவர்களின் ஆர்வத்தை வெளிக்காட்டுகிறது. தமிழக அரசும் ஆர்ட்ஸ் & சயின்ஸ் துறையில் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்துள்ளது.

கல்லூரிப் படிப்புதான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணி என்பதால் சிறந்த கல்வி நிறுவனத்தையும், படிப்பையும் தேர்வு செய்வது அவசியம். இதற்கு பெரிதும் வழிகாட்டும் விதத்தில் அமைகிறது ஆனந்த விகடன் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி இணைந்து வழங்கும் ’ஆர்ட்ஸ் & சயின்ஸ்- எந்தப் படிப்புக்கு எதிர்காலம்’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி. இதில் நீங்களும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் ஆனால், முன்பதிவு அவசியம்.

ஆனந்த விகடனின் ஒரு ஸ்மார்ட் வழிகாட்டல்
நாள்: 20.09.2020 (ஞாயிற்றுக்கிழமை), நேரம் காலை 10 மணி முதல் 12 மணிவரை

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கில் பதிவு செய்துகொள்ளவும்.

https://bit.ly/3hmoI9l

இந்த நிகழ்ச்சி உங்கள் நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு கண்டிப்பாக பயன்படலாம். ஆகவே, இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து பயன்பெற உதவிடுங்கள்.



source https://www.vikatan.com/news/education/a-smart-career-guidance-program-for-arts-and-science-aspirants-by-ananda-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக