கோவை மருதமலை அருகே வாயில் காயத்துடன் உணவு சாப்பிட முடியாமல் ஓர் மக்னா யானை கண்டறியப்பட்டது. வனத்துறை அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது, அது ஆனைக்கட்டி வழியாக கேரளாவுக்குள் சென்றுவிட்டது. கேரள வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தநிலையில்,
Also Read: கைவிட்ட தமிழக, கேரள வனத்துறை - வலியுடன் சுற்றித் திரியும் மக்னா யானை!
மக்னா மீண்டும் தமிழகத்துக்குள் வந்தது. இதையடுத்து, கோவை வனத்துறையினர் அந்த யானைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்கினர்.
வீடுகளை அதிகம் இடிப்பதால், கேரள மக்கள் அந்த யானைக்கு 'புல்டோசர்' எனப் பெயரிட்டிருந்தனர். அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டால் யானையின் வாய் பகுதி காயமடைந்தது. முக்கியமாக, நாக்குப்பகுதி சிதறி, மேல் தாடை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. காயமடைந்த மக்னா யானைக்கு உரிய சிகிச்சை கொடுக்காமல்,
தமிழக – கேரள வனத்துறையினர் பரஸ்பரம் யானையை விரட்டிவிடுவதாக புகார் எழுந்தது. யானையை பட்டாசு வைத்து, சைரன் ஒலி எழுப்பி விரட்டியதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.
"மயக்க ஊசி போட்டு பிடித்து சிகிச்சை கொடுத்தால், யானை உயிரிழக்க வாய்ப்புள்ளது. வாய்ப்பகுதி முழுவதும் சேதமடைந்திருப்பதால், அதனால் உணவும் சாப்பிட முடிவதில்லை. யானை சில நாள்கள்தான் உயிருடன் இருக்கும்" என்று வனத்துறையினர் கூறியிருந்தனர். இதனிடையே, மக்னா யானை நேற்று முன்தினம் மீண்டும் கேரளாவுக்கு சென்றது.
இந்நிலையில், சோலையூர் அருகே மரப்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த யானை, முடியாமல் அப்படியே சாலை ஓரமாக படுத்துவிட்டது. பிறகு, அந்த யானை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
உயிரிழந்த மக்னா யானைக்கு கேரள மக்கள் மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/makna-elephant-died-after-heavily-injured
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக