Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

`வேதனை, அவமானம், அதிர்ச்சி..!' - அமைச்சர்கள் வழக்கு முதல் பாலியல் வழக்கு வரை - நீதிபதிகளின் ஆதங்கம்!

கடந்த 10 நாள்களில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளையே கலங்கடித்த சில வழக்குகளையும், நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளையும் பார்க்கலாம்... 

``மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான செயல்கள் சமுதாயத்தில் சத்தமில்லாமல் நிகழ்த்தப்பட்டு வருவது, வேதனை அளிக்கிறது. மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான செயல்கள் சமுதாயத்தில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்

சமூகத்தில் அனைவரும் சமமானவர்கள் என்பதை உணர வேண்டும். மூன்றாம் பாலினத்தவரை வேற்றுமைப்படுத்துவது சமூகத்தில் வேற்றுமையை ஏற்படுத்தும். அவர்களுக்கு எதிரான நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும்."

கடலூர் மாவட்டம், நைனார் குப்பம் பஞ்சாயத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை

``ஜனாதிபதியாக ஒரு பெண் இருக்கும் இந்தக் காலத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமூகத்தில் நடப்பதை நினைத்து நாம் வெட்கித் தலை குனிய வேண்டும்.

நீதிபதி ஹேமலதா

``பல தடைகளைத் தாண்டி படித்து வெளியே வரும் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவே கருத முடிகிறது. கடுமையான சட்டங்கள் மூலம் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்படாவிட்டால், நமது சமூகம் பாதுகாப்பானதாக இருக்காது."

- 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமலதா வேதனை

``பாதாளச் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதை, சகித்துக் கொள்ள முடியாது.  நீதிமன்ற உத்தரவை உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்துவதில்லை. 

நீதிபதி கங்கபுர்வாலா

அனைத்து நகராட்சிகளும், பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்யத் தேவையான கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும். கருவிகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் குறித்து உயர் நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்." 

- பாதாளச் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும்  நடைமுறையை  முழுவதுமாக ஒழிக்கக் கோரியும், ஊழியர்களை இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு அதிருப்தி. 

நீதிபதி ஆதிகேசவலு

``அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாள்களாகத் தூங்கவில்லை. தீர்ப்பு மனசாட்சியை உலுக்கியதன் காரணமாகவே, தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

 தீர்ப்புகளுக்கு ஒரு Format-ஐ வைத்துக் கொண்டு, தேதியை மட்டும் மாற்றம் செய்து விடுதலை என்று தீர்ப்பு கூறிவிட்டார்கள் என்பது தெரிகிறது. எந்த கட்சியினர் அதிகாரத்துக்கு வந்தாலும் கட்சியினர் சார்ந்த வழக்குகளை நீர்த்துப் போகவே செய்கின்றனர். உண்மையில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படும் விதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது."

- உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/agony-humiliation-shock-from-ministers-case-to-sex-case-judges-apprehension

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக