Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

Tamil News Live Today: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம்!

தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது. சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கும் இந்த அமைதி பேரணி, அண்ணா சதுக்கத்தில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை நடைபெற உள்ளது.

கருணாநிதி, ஸ்டாலின்

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், `உங்களைக் காண காலையில் அணிவகுத்து வருகிறோம். உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை கொண்டு வருகிறேன். உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம் என்பதுதான் அந்த நல்ல செய்தி. நீங்கள் விரும்பி செய்ய வேண்டியதை நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். 2024 தேர்தல் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாய் ஐந்து ஆண்டுக்கு வரும் முறை ஒருமுறை வரும் தேர்தல் அல்ல இது” என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/latest-tamil-news-live-updates-dated-on-07-08-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக