Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

அமெரிக்காவில் படிக்க விரும்புகிறீர்களா? ஒரு குட் நியூஸ்; சென்னையில் U.S University Fair

வெளிநாடுகளில் சென்று பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் சென்று பயில மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அதைச் செயல்படுத்துவதில் ஒருவித தயக்கம் இருக்கலாம். 

இந்தத் தயக்கத்தை உடைக்கும் வகையில், 2023 அமெரிக்க கல்வி கண்காட்சியானது, இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 3 வரை அமெரிக்காவின் புகழ்பெற்ற, அங்கீகாரமுடைய 60 பல்கலைக் கழகங்களில் இருந்து பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வரவுள்ளனர்.

அமெரிக்காவில் சென்று உயர்கல்வி பெற ஆர்வமாக உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் இவர்களுடன் கலந்துரையாடலாம். இதனால் மாணவர்கள் தங்களது அமெரிக்க உயர்கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் குறித்துத் தெளிவான அறிவு பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரைச் செப்டம்பர் 2, சனிக்கிழமையன்று, ஹோட்டல் ஹயாத் ரீஜென்சியில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள்  https://bit.ly/EdUSAFair23PR வலைதள பக்கத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

அமெரிக்க உயர்கல்வி குறித்த விளக்கக்காட்சி (Presentation) மற்றும் அமெரிக்க மாணவர் விசா குறித்த விளக்க அமர்வு மதியம் 12.45 மணிக்கு, கண்காட்சிக்கு முன்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அமெரிக்க துணைத் தூதரகம்

இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. எஜுகேஷன் யுஎஸ்ஏ, சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளது. `இந்திய மாணவர்களின் கனவுகளை அடைய உதவும் வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமையும்’ என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/education/career/education-usa-study-in-the-us-conducted-in-the-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக