Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

`வாங்கிய கடனை கட்டவில்லை’ - ரூ.56 கோடிக்கு ஏலத்துக்கு வருகிறது நடிகர் சன்னி தியோலின் மும்பை பங்களா!

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடித்து சமீபத்தில் வெளி வந்த கதார் 2 படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. வெறும் 8 நாள்களில் படம் ரூ.300 கோடி அளவுக்கு வசூலித்துள்ளது. நடிகர் சன்னி தியோலுக்கு மும்பை ஜுகு காந்திகிராம் சாலையில் பங்களா ஒன்று இருக்கிறது. இந்த பங்களாவை சன்னி தியோல் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஸ்டூடியோவாக பயன்படுத்தி வந்தார். இந்த பங்களாவுக்காக சன்னி தியோல் பேங்க் ஆப் பரோடாவில் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை சன்னி தியோல் கட்டவில்லை. மொத்தம் 56 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கு சன்னி தியோல் கட்டவேண்டும்.

இதனால் வங்கி நிர்வாகம் பங்களாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஏலம் விட முடிவு செய்துள்ளது. வங்கி நிர்வாகம் ஏற்கனவே இதற்காக பங்களாவில் நோட்டீஸ் ஒட்டி இருக்கிறது. சன்னி தியோல் உண்மையான பெயர் அஜய் சிங்காகும். அஜய் சிங் பெயரில் தான் பங்களா இருக்கிறது. பங்களாவை ஏலம் விடுவதற்கான தேதியை பேங்க் ஆப் பரோடா முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் 25ம் தேதி ஆன்லைன் மூலம் சன்னி தியோல் பங்களா ஏலம் விடப்பட இருக்கிறது.

மகனுடன் சன்னி தியோ

பங்களாவை ஏலம் எடுப்பவர்கள் உடனே அதனை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாது. மாவட்ட நீதிமன்றம் அந்த பங்களாவை புதிய உரிமையாளர் கையகப்படுத்த ஒப்புதல் கொடுக்கவேண்டும். அந்த ஒப்புதல் கிடைக்கும் வரை சன்னி தியோல் தனது பங்களாவில் நடக்கும் தொழிலை தொடர்ந்து நடத்திக்கொள்ள முடியும்.

கதார் 2 ஹிட்டான மகிழ்ச்சியை சன்னி தியோல் கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், வங்கி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை மகிழ்ச்சியை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ளது.

நடிகர் சன்னி தியோல் சித்தியும், அவரின் தந்தை தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியுமான ஹேமாமாலினி கதார் 2 படத்தை தியேட்டரில் சென்று பார்த்தார். முன்னதாக ஹேமாமாலினி மகள் ஈஷா தியோல் கதார் 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சன்னி தியோல் தனது சகோதரருடன் கலந்து கொண்டார்.

அதோடு சன்னி தியோல் இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு முதல் முறையாக ஈஷா தியோல் வீட்டிற்கு சென்று ராக்கிக்கயிறு கட்டிக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்னி தியோல் தனது மகனின் திருமணத்திற்கு ஹேமாமாலினியையும், அவரது இரண்டு மகள்களையும் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/crime/money/actor-sunny-deols-mumbai-bungalow-is-up-for-auction-for-rs-56-crore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக