Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

தீராத கடன் தொல்லையிலிருந்து விடுபட நரசிம்ம ருண விமோசன மந்திரம்; 48 நாள்களில் நடக்கும் அதிசயம்!

48 நாள்கள் காலையிலோ, மாலையிலோ ஸ்ரீநரசிம்ம ருண விமோசன மந்திரத்தை ஓதி வந்தால், எத்தனை கடன் இருந்தாலும் படிப்படியாக வருவாய் பெருகி, கடன்கள் தீரும். எதிர்பாராத இடத்தில் இருந்தெல்லாம் உதவி கிடைத்து கடன்கள் தீரும். கடன் கொடுத்தவரே மனம் மாறி, கருணை காட்டும் நிலை வரும். கடனால் உண்டான வழக்கு, வம்புகள் சுபமாக மாறும்.

ஸ்ரீநரசிம்ம ருண விமோசன மந்திரம்

பிறவியே ஒரு கடன் தான். அந்த பிறப்பிலும் எத்தனை எத்தனை கடன்கள் நம்மைச் சூழ்ந்து வாட்டி வருகின்றன. கடன் வாங்காத நாடோ, மனிதர்களோ இங்கில்லை என்ற நிலையில்தான் உலகம் சுழன்றுக் கொண்டிருக்கிறது. சாதாரண மனிதர் கூட ஏதோ ஒருவகையில் கடனில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் உண்மை.

உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கடன் என்றால் பெரும் நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி கடன். அவ்வளவுதான் வித்தியாசம். பசியோடு கூட உறங்கிவிடலாம். கடனோடு இருப்பவருக்கு உறக்கமே வருவதில்லை. அதனால்தான் கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்கிறது கம்ப ராமாயணம்.

குடும்பத்தின் செலவுக்காக சம்பாதிப்பது என்ற நிலை மாறி, கடன்களை அடைக்கவே சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையை நவீன வாழ்க்கை முறை உருவாக்கிவிட்டது. வீடு, கார், அலைபேசி எல்லாமே தவணையில் வாங்கிய ஒருவருக்கு மாத சம்பளம் என்பது சுமையே தவிர சுகமானது இல்லை. அதிலும் தொழிலுக்காக, வியாபாரத்துக்காக என்று பெரும் பொருளை இழந்து கடன் பட்டவர் நிலை இன்னும் மோசம். அதைவிடக் கொடுமை அடுத்தவரை நம்பி ஜாமீன் கொடுத்து அந்த கடனையும் சுமப்பது. மது, மாது, பேராசை, சூது, தலைக்கனம் இவற்றால் கடன் அடைந்தவர்களும் ஏராளம் ஏராளம். இப்படி சுற்றிலும் கடனைச் சுமந்து வாழும் ஒருவருக்கு விமோசனமே இல்லையா! ஒரு குழியை மறைக்க வேறொரு இடத்தில் குழி பறித்து மண்ணை எடுத்து... அதுவே கடைசியில் சுற்றிலும் பெரும் குழிகளாக மாறி ஒருவரை அச்சுறுத்தும்போது தெய்வம் தானே துணையாக வரவேண்டும். நிச்சயம் நம்புங்கள் உங்கள் கடன் பிரச்னைகளைத் தீர்க்கவும், உங்களை மீட்டெடுக்கவும் ஆன்மிகம் வழி சொல்கிறது.

திருச்சேறை ருணவிமோசன லிங்கேஸ்வரர் கோயில்

பிரதோஷ வழிபாடு கடன் தொல்லைகளைத் தீர்க்கக்கூடியது என்கிறது ஆன்மிகம். திருச்சேறை ஆலயத்தின் மேற்குத் திருச்சுற்றில் எழுந்துள்ளது ருணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதி. ருணம் என்றால் தீர்க்க முடியாத தொடர்ந்து வரும் இம்சை என்று பொருள். கடன்பட்டோர் தேடிவந்து வணங்கும் பரிகாரத் தெய்வமாக விளங்குபவர் ஸ்ரீருணவிமோசனர். இவரை திங்கள்கிழமைகளில் மலர் சாத்தி, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட நிச்சயம் கடன்கள் தீரும் என்பது ஐதிகம். வசிஷ்டர் அருளிய `தாரித்ர துக்க தஹன சிவ ஸ்தோத்திரம்' சொல்லி வழிபட கடன் தீரும் என்பது நம்பிக்கை.

'விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய

கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய

கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய

தாரித்ரிய துக்க தஹனாய நமச்சிவாய!'

இன்னும் எளிமையாக வீட்டிலேயே கடன் நிவர்த்தி செய்ய விரும்பும் அன்பர்களுக்கு ஸ்ரீநரசிம்ம ருண விமோசன மந்திரம் எனும் அற்புதம் நிச்சயம் பலன் அளிக்கும்.

கணத்தில் ஓடிவந்து காக்கும் கருணை தெய்வமான ஸ்ரீநரசிம்மரை மனதில் தியானித்து, முடிந்தால் அவரது திருப்படத்துக்கு முன்னால் அமர்ந்து தீப, தூபம் ஏற்றி இந்த மந்திரத்தை முடிந்த அளவு பாராயணம் செய்ய வேண்டும். சுத்தமான பசும்பாலில் கல்கண்டு கலந்து நைவேத்தியம் செய்ய கூடுதல் சிறப்பு.

நரசிம்மர்

48 நாள்கள் காலையிலோ, மாலையிலோ ஸ்ரீநரசிம்ம ருண விமோசன மந்திரத்தை ஓதி வந்தால், எத்தனை கடன் இருந்தாலும் படிப்படியாக வருவாய் பெருகி, கடன்கள் தீரும். எதிர்பாராத இடத்தில் இருந்தெல்லாம் உதவி கிடைத்து கடன்கள் தீரும். கடன் கொடுத்தவரே மனம் மாறி, கருணை காட்டும் நிலை வரும். கடனால் உண்டான வழக்கு, வம்புகள் சுபமாக மாறும். எனவே மனம் ஒன்றி, மிகுந்த நம்பிக்கையோடு ஜபித்து வாருங்கள். நலமே விளையும்.

ஸ்ரீநரசிம்ம ருண விமோசன மந்திரம்:

நரசிம்மர்

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்

அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஓம் நமோ நாராயணாய.



source https://www.vikatan.com/spiritual/temples/lord-narasimma-worship-and-spiritual-mantra-for-debt-burden

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக