Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

``மாமன்னன் பட இயக்குநரை ஸ்டாலின் நேரில் சென்று பாராட்டுகிறார், ஆனால்..?!" - ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை மக்களிடம் விளம்பரப்படுத்த ஜெயலலிதா பேரவை சார்பில் மரக்கன்றுகளையும், லோகோவையும் வழங்கும் நிகழ்ச்சி மதுரை அருகே குமாரத்தில் நடந்தது.

ஆர்.பி.உதயகுமார்

இதில் கலந்துகொண்டு ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் மாநாடு முதலில் 25 ஏக்கரில் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது 65 ஏக்கரில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு அவசர கதியில் தயாரிக்கக்கூடாது என்று எடப்பாடியார் தாயைப்போல அறிவுரை வழங்கி உள்ளார். அதேபோல் வருகின்றவர்களுக்கு சுகாதார வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட உள்ளன. ஆடி மாதக் காற்று அதிகமாக வீசுவதால் தொண்டர்களுக்கு தூசியினால் இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் 35 ஏக்கரில் தரையில் மேட் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து எடப்பாடியார் கெளரவிக்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்

ஸ்டாலின் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால், தன் தந்தையார் புகழை பரப்ப கல்வெட்டு வைப்பதற்கும், தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கு தான் உழைத்து வருகிறார் .

தமிழகத்தில் பள்ளிகளில் சாதிய தீண்டாமை அதிகரித்து வருகிறது. இது வேதனையை ஏற்படுத்துகிறது. மாமன்னன் படம் எடுத்த இயக்குநரை ஸ்டாலின் நேரில் சென்று பாராட்டுகிறார். ஆனால், நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும், அதே போல் டெல்டா பகுதிகளில் பாதிப்படைந்த விவசாயிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முதலமைச்சருக்கு நேரமில்லை.

ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை குறித்து எடப்பாடியார் விரிவாக பேசியுள்ளார். ஆனால், ஸ்டாலின் பச்சைபொய் சொல்கிறார். 1991-ஆம் ஆண்டில் முதலமைச்சராக ஜெயலலிதா வந்தபோது தாயுள்ளத்தோடு மன்னித்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் தாமாக சட்டையை கிழித்துக்கொண்டு அதிமுக உறுப்பினர்கள் தன் சட்டையை கிழித்து விட்டதாக நாடகத்தை அரங்கேற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rb-udhayakumar-speech-at-madurai-regarding-stalin-statement-on-jayalalithaa-incident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக