Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

Doctor Vikatan: முல்தானி மிட்டி பயன்படுத்துவது சருமத்துக்கு பலன் தருமா?

Doctor Vikatan: சருமத்துக்கு முல்தானி மிட்டி பயன்படுத்துவது சரியானதா.... அதை எப்படி, எத்தனை நாள்களுக்கொரு முறை பயன்படுத்த வேண்டும்?

Devi Meena, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

முல்தானி மிட்டி என்பது ஒருவகையான களிமண். முகத்திலுள்ள தண்ணீரையும் எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிக்கொண்டு, முகத்தை வறட்சியாக வைப்பதுதான் களிமண்ணின் வேலை.

பருக்கள் இருப்பவர்கள் முல்தானி மிட்டி உபயோகிக்கும்போது, அது பருக்களுக்கு காரணமான எண்ணெய்ப்பசையைக் கட்டுப்படுத்தும். சரும மருத்துவராக நான் இதை என் பேஷன்ட்டுகளுக்கு பரிந்துரைப்பதில்லை. ஆனாலும் சிலருக்கு பல வருடங்களாக முல்தானி மிட்டி உபயோகித்துப் பழக்கம் இருக்கும். அவர்கள் அதைத் தொடர்வதில் பிரச்னையில்லை. மேற்குறிப்பிட்ட தேவை இருந்தால் உபயோகிக்கலாம்.

முல்தானி மிட்டி | மாதிரிப்படம்

முல்தானி மிட்டியை எதற்கு உபயோகிக்கிறோம் என்ற தெளிவுடன் உபயோகிப்பது சிறந்தது. அதை சாதாரண தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவிவிடலாம். மற்றபடி முல்தானி மிட்டியை எலுமிச்சைச் சாற்றுடனோ, பாலாடையுடனோ குழைத்து உபயோகிப்பதைத் தவிர்ப்பதுதான் நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-using-multani-mitti-benefits-the-skin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக