புதிதாத வீடு வாங்குபவர்கள் `வெல்நெஸ் ஹோம்ஸ்' (Wellness Homes) எனும் ஆரோக்கிய வீடுகளைத் தேர்வு செய்யலாம். ஆனால், ஏற்கெனவே கட்டிய வீடுகளை எப்படி வெல்நெஸ் ஹோமாக மாற்றுவது என ஆலோசனை அளிக்கிறார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துக் கட்டுமானப் பொறியாளர் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஜி.கணேஷ்.
``ஒரு வீடு கட்டும்போது அரசின் விதிமுறைகளின்படி வீட்டின் மொத்தப் பரப்பளவில் எட்டில் ஒரு பங்கு ஜன்னல் அமைந்திருக்க வேண்டும். குளியல் அறை, கழிவறையில் எளிதில் ஈரம் காய்வதற்கு ஏதுவாகக் காற்று உள்ளே வருவதற்காக ஜன்னல் வைத்திருக்க வேண்டும். ஆனால், பல வீடுகளில் இவை இருப்பதில்லை. வாஸ்து மற்றும் விஞ்ஞானபூர்வத்தின் அடிப்படையில் தென்கிழக்கு திசையில் சமையலறை இருக்க வேண்டும். அப்போதுதான் காலையில் சூரிய ஒளி அறையில்படும்.
பூமியின் சுழற்சிக்கு ஏற்றாற்போல் ஆற்றல் (Energy) உருவாகும்போது, வடகிழக்குத் திசையிலிருந்துதான் வீட்டின் உள்ளே நுழையும். அதனால் வீட்டில் வடகிழக்கு திசையில் நிறைய ஜன்னல்களை அமைக்க வேண்டும். உள்ளே வரும் ஆற்றல் தென்மேற்கு திசை வழியாக வெளியேறும் என்பதால், அதைத் தடுப்பதற்கு தென்மேற்கு திசையில் திறப்புகள், ஜன்னல்கள் வைப்பதைக் குறைக்கிறார்கள்.
அரசின் விதிமுறைகளின்படி, ஒரு கட்டடத்தின் பக்கவாட்டுகளில் ஒரு மீட்டர் இடைவெளிவிட வேண்டும். இதையே பக்கத்து கட்டடத்தின் கட்டுமானத்திலும் பின்பற்ற வேண்டும். அப்படியிருந்தால் இரண்டு கட்டடம் அல்லது வீடுகளுக்கும் இடையில் சுமார் 2 மீட்டர் (6.5 அடி) இடைவெளியிருக்கும்.
இதனால் காற்றோட்டம், சூரிய ஒளி கிடைப்பதுடன், தோட்டம் போடுவது, செடி வைப்பது ஆகியவற்றுக்கான இடமும் கிடைக்கும். வீடும் கண்ணுக்குக் குளுமையாக பசுமையாக காட்சி அளிக்கும்.
கட்டிய வீடுகளில் பரப்பளவில் எட்டில் ஒரு பங்கு ஜன்னல் வைப்பதற்கு வாய்ப்பிருந்தால், கட்டடத்தை சிறிது மாற்றியமைத்து ஜன்னல்களை வைக்கலாம். ஜன்னல்களைப் போதுமான அளவு வைத்தாலே காற்றோட்டம், சூரிய ஒளி கிடைத்துவிடும். இது தவிர, கார்பன் டை ஆக்ஸைடை உட்கிரகித்துக்கொண்டு ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் இன்டோர் பிளான்ட்ஸ் போன்றவற்றை வளர்க்கலாம்" என்றார்.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் அனைவருக்கும் வீட்டின் உன்னதத்தை எடுத்துக்காட்டியிருக்கிறது. இந்த நிலையில் `வெல்நெஸ் ஹோம்ஸ்' (Wellness Homes) எனும் ஆரோக்கிய வீடுகள் பற்றி அனைவரும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
நைட் ஃபிராங்க் இந்தியா ரியல் எஸ்டேட் ஏஜென்சி 2020-ம் ஆண்டுக்கான ஹெல்த் ரிப்போர்ட்டை சமீபத்தில் வெளியிட்டது. அதில், `2020-ம் ஆண்டு வீடு வாங்க விரும்புவோரில் 55% பேர் ஆரோக்கிய வாழ்க்கைக்குரிய வசதிகள் இருக்கும் வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வகை வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
`வெல்நெஸ் ஹோம்ஸ்' குறித்த முழுமையான அறிமுகத்தையும் வழிகாட்டுதல்களையும் நாணயம் விகடன் இதழில் அறிய > கோவிட்-19... அதிகரிக்கும் `வெல்நெஸ் ஹோம்ஸ்!' - என்னென்ன வசதிகள்..? https://bit.ly/3inWa0F
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/business/news/can-we-convert-a-existing-home-into-wellness-home
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக