Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

ஃபளோட்டிங் ரேட், ஃபிக்ஸட் ரேட், செமி ஃபிக்ஸட் ரேட்... வீட்டுக் கடன்களில் எது பெஸ்ட்?

நம் நாட்டில் வீட்டுக் கடன்கள் மூன்று விதமாக வழங்கப்படுகின்றன. அவை...

1. ஃபளோட்டிங் ரேட் கடன்கள்

2. ஃபிக்ஸட் ரேட் கடன்கள்

3. செமி ஃபிக்ஸட் ரேட் கடன்கள்

இந்த மூன்று வகைகளில் பெரும்பாலானோர் வாங்குவது ஃப்ளோட்டிங் ரேட் கடன்களைத்தான்.

ஃப்ளோட்டிங் ரேட் கடன்கள்!

ஃப்ளோட்டிங் என்பது, கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ ஏற்றும்போது கடன்களுக்கான வட்டி உயரும். வட்டி விகிதங்களை இறக்கும்போது, கடன்களுக்கான வட்டி குறையும். ஆனால், நம் நாட்டில் நடப்பது என்னவென்றால், வட்டி விகிதம் ஏறும்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஆட்டோமெட்டிக்காக ஏறிவிடும். ஆனால், இறங்கும்போது வங்கிகள் தானாகவே குறைப்பது மிகமிகக் குறைவாகவே இருக்கும்.

வீட்டு கடன்

உதாரணத்துக்கு, சந்தையில் 0.50% வட்டி குறைந்தால், நமது கடனில் வங்கிகள் வட்டியைக் குறைப்பது 0.05% - 0.10% என்ற அளவுக்கு மட்டுமே இருக்கும். இவ்வாறு செய்வதால் வங்கிகளின் நிகர வட்டி மார்ஜின் உயரும்; அதனால் லாபங்களும் கூடும். ஆகவே, வங்கிகள் ஃப்ளோட்டிங் ரேட் அடிப்படையிலான கடனை வாடிக்கையாளர்களுக்குத் தருவதில் ஆர்வமாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஃபிக்ஸட் ரேட் கடன்கள்..!

ஃபிக்ஸட் ரேட் கடன்களை பலவித காரணங்களுக்காக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தருவதில்லை. வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதற்கு பெரிய வரவேற்பில்லை. காரணம், ஒருவர் கடன் வாங்கும்போது அன்றைய நிலைமையில் முழு ஃபிக்ஸட் ரேட் கடன்களின் வட்டி விகிதம், ஃப்ளோட்டிங் ரேட் கடன்களின் வட்டி விகிதத்தைவிட எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். ஆகவே, ஃபிக்ஸட் ரேட் அடிப்படையில் கடன் வாங்கினால் இ.எம்.ஐ தொகையை அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்குமே என்று நினைத்து, பலரும் ஃப்ளோட்டிங் வட்டி விகித கடனையே தேர்வு செய்துவிடுகிறார்கள்.

ஆனால், வட்டி குறைவாக இருக்கும்போது முழு ஃபிக்ஸட் வட்டி விகிதக் கடன்களுக்கு செல்வது நன்மை பயக்கும் என்பது பலரும் புரிந்துகொள்ளாத உண்மை.

வீட்டு கடன்

செமி ஃபிக்ஸட் ரேட் கடன்கள்!

மூன்றாவது வகையான செமி ஃபிக்ஸட் ரேட் கடன்களுக்கு ஓரளவு மக்கள் செல்கிறார்கள். முதல் ஒரு வருடத்துக்கு அல்லது மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு வட்டி விகிதம் ஃபிக்ஸடாக அதாவது, ஒரே மாதிரி மாறாமல் இருக்கும்; அதன்பின் மாறும். கடன் வாங்கியவுடன் வட்டி விகிதம் உயர்ந்தால், அதனால் ஏற்படும் அதிர்ச்சிகள் நம்மைத் தாக்காமல் இது தாங்கிக் கொடுக்கும். ஆனால், இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பவர்களும் குறைவுதான். ஆரம்பத்தில் இதன்மூலம் நன்மை கிடைத்தாலும் பிற்பாடு பாதிப்பு வருமோ என வாடிக்கையாளர்கள் பயப்படுகிறார்கள்.

- சரி, வங்கிகளின் பிரச்னை ஒருபக்கம் இருக்கட்டும். நாம் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்காத பட்சத்தில், அந்த வட்டியைக் குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? - முழுமையான வழிகாட்டுதலை நாணயம் விகடன் இதழில் அறிய > குறையாத வீட்டுக் கடன் வட்டி... வங்கிகளிடம் பேசி குறைக்கும் வழிமுறைகள்! https://bit.ly/32rdsEq

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/business/banking/fixed-or-floating-which-home-loan-interest-rate-is-best

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக