பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
இந்திய ரயில்வே - பணியாளர் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே மிகப் பெரிய நிறுவனம். முறையான கட்டமைப்பு வசதிகளுடன், லாபத்தில் இயங்கும் சிறந்ததொரு சேவைத்துறையாக இந்திய ரயில்வே விளங்குகிறது. இந்த மாபெரும் நிறுவனத்தின் அமைப்பும், செயல்பாடும் நமக்கு வியப்பூட்டக்கூடிய ஒன்றாகவே அமைந்துள்ளன.
டல்ஹவுசி பிரபு முதல் பியூஷ் கோயல் வரை பலராலும் இந்திய ரயில்வேத் துறை சீராட்டி வளர்க்கப்பட்டுள்ளது. சர்வேதேசத் தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட அதிவேக தேஜஸ் ரயில் முதல், பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற ஊட்டி மலை ரயில் வரை இந்திய ரயில்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவைதான்!
அவ்வாறே மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதில் ரயில்வேயில் பணிபுரியும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமே சமமான பங்குண்டு.
அதில் ரயில்வேயின் 'டி' பிரிவு ஊழியர்களில் ஒரு வகையான ரயில் வழித்தடங்களை ஆய்வு செய்யும் 'டிராக்மேன்'களின் பணி சற்று கடினமான ஒன்றுதான்.
Also Read: `வெளியே சாப்பிடுங்க; நாட்டுக்கு உதவுங்க!' - இங்கிலாந்தின் புது முயற்சியும் தாக்கமும் #MyVikatan
டிராக்மேன்கள் புதிய தடங்கள் இடுதல், பழுது பார்த்தல், பராமரித்தல், தடங்களை சுத்தம் செய்தல்,டிராக் பேலஸ்ட்டைச் சரிபார்த்தல்,பாதுகாப்பு உபகரணங்களை பராமரித்தல்,தடங்கள் தடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தல்,விரிசல்களைச் சரிபார்த்தல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்கின்றனர்.குளிர், மழை,வெயில் ஆகிய இடர்பாடுகளைப் பொருட்படுத்தாமல், போல்ட்கள், ஸ்பேனர்கள் உள்ளிட்ட கனமான பொருட்களை டிராக்மேன்கள் சுமந்து செல்கின்றனர்.இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் நடந்து சென்றே சோதனை மற்றும் பராமரிப்புப் பணிகளை இரவு, பகல் பாராமல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டிராக்மேன்களுக்கு உதவும் வகையில் ரயில் தண்டவாளங்களின் மீது இயங்கும் வகையிலான புதிய "ரெயில் சைக்கிளை" இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது ரயில்வே ஊழியர்களுக்கு, குறிப்பாக டிராக்மேன்களுக்கு தினசரி ஆய்வு, கண்காணிப்பு மற்றும் தடங்களை பழுதுபார்ப்பதற்கு உதவும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்தமாத இறுதியில் இந்திய ரயில்வேயின் கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலம் (East Coast Railway - ECoR) இந்த சைக்கிள் தங்கள் மண்டலத்தில் வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு வந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிறப்பியல்புகள்:
# இந்த சைக்கிள் இந்திய ரயில்வேயின் சொந்தத் தயாரிப்பு ஆகும்.
# ECoR ன் ரயில் சைக்கிள்கள் அதன் குர்தா சாலை பிரிவின் நிரந்தர வழி (Permanent Way - P Way) யூனிட் மூலம் சொந்தமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
# இந்த ரயில் சைக்கிள்கள் சராசரியாக 10 கி.மீ வேகத்தில் ரயில் தடங்களில் இயங்கும்.
#இவை அதிகபட்சமாக 15 கி.மீ வேகத்தில் ரயில் தண்டவாளங்களின் மீது செல்லக்கூடியவை.
# ரயில் சைக்கிள்கள் வெறும் 30 கிலோ எடையுள்ளவை.எனவே இவற்றை ஒருவர் எளிதில் தூக்கி,இறக்க முடியும்.
# மிக விரைவாக சைக்கிளை தண்டவாளத்தில் பொருத்தி இயக்கவும், தண்டவாளத்தில் இருந்து நீக்கிவிடவும் முடியும்.
ரயில் சைக்கிளின் அமைப்பு:
# சைக்கிளின் இரு சக்கரங்களுக்கும் முன்பு இரும்பு குழாய்களால் இணைக்கப்பட்ட ஒரு இணை இரும்பு முன் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
* இந்த இணை சக்கரம் சைக்கிள் செல்லும் ஒரு ரயில் தண்டவாளத்தின் மேல் இயங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
* இந்தச் சக்கரம் இருக்கும் இரும்புக் குழாயை சைக்கிள் ஓட்டும்போது கீழ் இறக்கி தண்டவாளத்துடன் பொருத்திக்கொள்ள முடியும்.
* சைக்கிளின் முன் பின் பகுதிகளை இரும்பு பைப்புகள் கொண்டு இணைக்கப்பட்டு,அவற்றின் இறுதியில் இன்னொரு இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.இது மற்றொரு தண்டவாளத்தின் மீது பொருந்தி இயங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
* இது ரயில் சைக்கிளை சமநிலைப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் சைக்கிளின் பயன்கள்:
1)டிராக்மேன்களின் சிரமங்கள் பெருமளவு குறையும்.
2)மழைக்காலங்களில் தடங்களை விரைவாக ஆய்வு செய்வதிலும்,
கண்காணிப்பதிலும் டிராக்மேன்களுக்கு உதவும்.
3)குறுகிய காலத்தில் ஊழியர்கள் தடங்களை எளிதாக ஆய்வு செய்யலாம்.
4)கோடைகாலத்திலும் ரோந்து செல்ல ரயில் சைக்கிள் மிகவும் உதவியாக இருக்கும்.
5)தடங்களின் பாதுகாப்பை விரைவாக, எளிதாக உறுதிப்படுத்த முடியும்.
6)மனித உழைப்பும்,நேரமும் பெருமளவு மிச்சப்படும்.
7)ரயில்களின் தாமதம் கணிசமாகக் குறையும்.
இந்திய ரயில்வே - சில புள்ளிவிபரங்கள்:
# ரயில்வே நெட்வொர்க் ஒவ்வொரு நாளும் 23 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்கிறது.
# 2019 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஒரு பில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
Also Read: வறுமை கொடிது! - ஆசிரியை பகிரும் லாக்டெளன் துயர கதை #MyVikatan
# 2020 முதல் காலாண்டு நிலவரப்படி தினசரி மூன்று மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு மேல் சரக்கு போக்குவரத்து ரயில்வேயால் கையாளப்படுகிறது.
#ஒவ்வொரு நாளும் ரயில்களில் பயணிக்கும் 2.3 கோடி இந்தியர்களுக்கு - நாட்டின் மக்கள் தொகையில் 1.8% - மக்களுக்கு இந்திய ரயில்வே செய்யும் சேவை மகத்தானது.
# இந்திய ரயில்வே 67,368 கி.மீ. அளவிற்கான ரயில் பாதையினைக் கொண்டுள்ளது.இது பூமத்திய ரேகையினை 1.5 முறை சுற்றி வருவதற்குச் சமமாகும்.
# கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பணியாளர்கள் இந்திய ரயில்வேயில் பணியாற்றுகின்றனர்.
# இந்திய ரயில்வே ஒரு வருடத்திற்கு 8.1 பில்லியன் பயணிகளை கொண்டு செல்கிறது.
# 18 மண்டலங்களில் 8000 ற்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மூலம் 13,000 ற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்திய ரயில்வே குறித்த இந்தப் புள்ளிவிபரங்கள் நமக்கு பெரும் வியப்பு அளிக்கக் கூடியவையே! இம்மாபெரும் நிறுவனம் தன் கடைநிலை ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு
மேற்கொண்டிருக்கும் ரயில் சைக்கிள் என்னும் முன்னெடுப்பு ஒரு பாராட்டத்தக்க அம்சமாகும்!
கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரயில் சைக்கிள் வசதி,இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.
கோடிக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், லட்சக்கணக்கான தனது பணியாளர்களின் நலனுக்காகவும் இந்திய ரயில்வே அறிமுகம் செய்திருக்கும் இந்த ரயில் சைக்கிள்கள் மிகவும் அவசிமான மற்றும் அனைத்துத் தரப்பினரும் வரவேற்கக்கூடிய ஒன்றாகவே அமைந்துள்ளன.
பயணிகள் நலனுக்காக இலவச WiFi,பயோ டாய்லெட்,விகால்ப்,ரயில் மடாட் ஆப்,ரீடிங் லைட்ஸ்,முன்பதிவு தொழில்நுட்பங்கள், தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இன்றைய இந்தியப் போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ரயில்வே துறை,இதுபோன்று இன்னும் பல்வேறு வசதிகளையும்புதுப்புது தொழில் நுட்பங்களையும் நடைமுறைப்படுத்தி உலகின் தலைசிறந்த மக்கள் சேவை வழங்கும் நிறுவனமாக மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/train-cycle-indian-railways-new-innovation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக