Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ஆயுள் நீட்டிக்கும் தேக சுத்தி யோக பயிற்சி முறைகள்... நீங்களும் கலந்துகொள்ளலாம்!

அரசனானாலும் ஆண்டியானாலும், குடும்பஸ்தன் ஆனாலும் பந்தங்களை விட்ட யோகியானாலும் இந்த தேகத்தைப் பாதுகாப்பது என்பது அவசியமானது. ஆனால் வேகமான இயக்கத்தில் சுழன்றுக் கொண்டிருக்கும் இன்றைய மனிதர்கள் பதற்றம், மன அழுத்தம், கவலை, டென்ஷனால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் உடலில் மூச்சின் சுழற்சி ஒழுங்காக இயங்குவதில்லை. இதயத் துடிப்பு அதிகமாகவுள்ளது, ரத்த அழுத்தம் உள்ளது சீராக இருப்பதில்லை. இதனால் பல்வேறு உபாதைகள் நிகழ்கின்றன. 40 வயதில் 80 வயது முதியவரைப் போல ஞாபக மறதி, தடுமாற்றம் எல்லாமே நடக்கின்றன. இதற்கெல்லாம் காரணமென்ன...

யோகா

அமைதியற்ற நிலைதான். அமைதியான ஆன்மா, உறுதியான உடலைப் பெறும். ஆன்மா அமைதியானால் உள்ளுறுப்புகள் வலிமை பெறும். இதனால் வெளிப்புறத் தோற்றமும் பொலிவைப் பெறும் என்பதே சூட்சுமம். வெளிப்புற உடலை நாம் அடிக்கடி சுத்தி செய்து பொலிவு பெறுவதைப்போல நம் உள்ளுறுப்புகளையும் சுத்தி செய்வதற்கும் நம் முன்னோர்கள், ஞானியர்கள் பல வழிகளைக் கூறியுள்ளனர். சீரான மூச்சுப் பயிற்சி, சில எளிமையான யோகப் பயிற்சியினால் நம் உள் தேகத்தை வலிமையாக்கி நோயற்ற ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம் என்பதே அது. இதன் வழியே நம் ஆயுளையும் நீட்டித்துக் கொள்ளலாம் என்பதும் உண்மை.

தேக சுத்தி பயிற்சியால் 3 வகை நோய்களையும் நீக்கலாம்!

1. இந்த தேக சுத்திப் பயிற்சியால் வருபிணி நீக்கலாம். வருபிணி என்பது புற காரணிகளால் நம்முள் உருவாகும் நோய்கள். தொற்று நோய்கள், காச நோய் போன்றவை.

2. தேக சுத்தியால் துயர் பிணி நீக்கலாம். துயர் பிணி என்பது நாம் அதிகமாக உழைத்ததால் உருவாகும் நோய்கள். கை - கால், மூட்டு - முதுகு வலிகள், தலைவலி, காய்ச்சல் போன்றவை.

3. இந்த தேக சுத்திப் பயிற்சியால் கன்ம நோய்களையும் நீக்கலாம். அதாவது கர்மவினையால் ஜீன்களின் வழியே உருவாகும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவை.

இவற்றையெல்லாம் விட நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கி மேற்கண்ட மூன்று வகை பிணிகளும் வரமால் நம்மைப் பாதுகாத்தும் கொள்ளலாம் என்பதும் சிறப்பு.

யோகா குரு அரி

இதையெல்லாம் எப்படிச் செய்ய முடியும் என்கிறீர்களா... அதற்குத்தான் 7 வகை சுத்தி முறைகள் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளன. அவை நாடி சுத்தி, தந்த சுத்தி, நேத்திர சுத்தி, கப சுத்தி, குடல் சுத்தி, உடல் சுத்தி, பட்ச சுத்தி என்பன. இந்த ஏழு வகை சுத்திகள் குறித்தும் சில செய்முறை பயிற்சிகள் குறித்தும் இந்த வகுப்பில் நாம் காணவிருக்கிறோம். இதனால் இயற்கையான வழியில் இலகுவான உடல் வாகை நாம் பெறலாம்.

இந்த பயிற்சிகளின் நன்மைகள்

முறையான மூச்சு மற்றும் தேக பயிற்சிகளினால் உள்ளுறுப்புகள் வலிமை பெற்று நீண்ட ஆயுள் பெறலாம். மேலும் மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். இதயம் பாதுகாக்கப்படும். ரத்த அழுத்தம் சீராகும். ரத்தம் சுத்தமாகும். மூளை நரம்புகளைத் தூண்டிப் புத்துணர்ச்சி கிடைக்கும். நினைவாற்றல் பெருகும். சுருங்கச் சொல்லின் உங்கள் மனம் விரும்பும் தேகத்தைப் பெறலாம்.

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ...’ என்று பாரதி கேள்வி எழுப்பினாரே கொஞ்சம் யோசியுங்கள். நலமான வாழ்வைப் பெறுவது நம் ஆன்மாவின் விருப்பமல்லவா!

"விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,"

தேக சுத்தி யோகா

கேட்டதையெல்லாம் பெறலாம். அதை நம் முன்னோர்கள் ஏற்கெனவே வகுத்துக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம்தான் அதையெல்லாம் மறந்துவிட்டோம். இந்தப் பயிற்சியில் இணைவதால் பழைமையை மீட்டெடுத்து நலமிக்க வாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி.

கவனிக்கவும்:

  1. இந்தப் பயிற்சிகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். சுத்தி முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.

  2. உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  3. பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

  4. உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது.

  5. உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

நாள்: 11.10.2020

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/news/yoga-for-long-life-online-workshop-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக