இந்தியா - சீனா எல்லையில் மீண்டும் பதற்றம்!
இந்திய சீன எல்லை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஒருபக்கம் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் எல்லையில் அத்துமீறும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனிடையே காட்டில் வேட்டையாடச் சென்ற நாச்சோ பகுதியைச் சேர்ந்த ஐந்து கிராமவாசிகள் சீனா ராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கிழக்கு லடாக் பகுதியில் இருக்கும் தெற்கு பாங்காங் சோ ஏரிக்கு அருகில் இருநாட்டு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீன அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான க்ளோபல் டைம்ஸ், இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
source https://www.vikatan.com/news/general-news/08-09-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக