Ad

சனி, 12 செப்டம்பர், 2020

"விரைவில் மாஸ்டர் ரிலீஸ்... எங்கே, எப்போது?"- விவரம் சொல்லும் விஜய் டீம்!

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாகின்றன. 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' தொடங்கி நிறைய தமிழ்ப் படங்கள் இதுவரை ஓடிடி-யில் ரிலீஸாகியுள்ளன. தற்போது சூர்யாவின் 'சூரரைப் போற்று', விஜய் சேதுபதியின் 'க.பெ.ரணசிங்கம்' போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகவும், அமேசானுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உண்மை என்ன என 'மாஸ்டர்' டீமிடமே கேட்டேன்.
மாஸ்டர்

"இதுவரை இதுபோல் பல நூறு முறை சொல்லிவிட்டார்கள். நாங்களும் பலமுறை தெளிவுபடுத்திவிட்டோம். படம் நிச்சயம் தியேட்டரில்தான் ரிலீஸாகும். அமேசானுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. யாரும் வதந்திகளை நம்பவேண்டாம். 'மாஸ்டர்' படத்தை ரசிகர்கள் விரைவில் தியேட்டரில் பார்க்கலாம். அது இந்த ஆண்டே கூட நடக்கலாம். தியேட்டர்கள் எப்போது திறந்தாலும் 'மாஸ்டர்' படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் ரெடி" என்றார்கள்.

ஆக, பொங்கலுக்கு முன்பேகூட 'மாஸ்டர்' ரிலீஸாகலாம்... கெட் ரெடி ஃபோக்ஸ்!


source https://cinema.vikatan.com/tamil-cinema/is-vijays-master-movie-heading-for-a-direct-ott-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக