Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

கோவை: கொட்டி தீர்த்த கனமழை.. இடிந்து விழுந்த கட்டடம்! - இருவர் பலியான சோகம்

கோவை செட்டிவீதி பகுதியில் வனஜா என்பவருக்கு சொந்தமாக ஓர் இரண்டு மாடி கட்டடம் உள்ளது. கடந்த சில நாள்களாக கோவையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை முதலே கோவை முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

கோவை விபத்து கட்டடம்

Also Read: மழை வந்தால் அரசும், மக்களும் செய்ய வேண்டியது இதுதான்! ரமணன் Exclusive Interview | SR Ramanan

குழந்தைகள், முதியவர்கள் என சுமார் 11 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டனர். பதறியடித்து பொதுமக்கள் மீட்புப் பணியை தொடர்ந்தனர். அடுத்த சில நிமிடங்களுக்குள் தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோரும் நேரில் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். கட்டடம் இடிந்து விழுந்ததில், கீழே இருந்த ஓர் ஓட்டு வீடும் இடிந்துவிட்டது. முதல்கட்ட விசாரணையில், அந்த கட்டடம் மிகவும் பழமையானது என தெரியவந்துள்ளது. விபத்து நடந்த பகுதி மிகவும் குறுகலான சாலை.

மீட்புப் பணி

அதனால், மீட்புப் பணியில் சற்று சிக்கல் நீடித்தது. அப்படி இருந்தும் இரவு முழுவதும் மீட்புப் பணி தொடர்ந்தது. தன்வீர், வனஜா, மனோஜ், மணிகண்டன், கவிதா, சரோஜினி ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக கோபால்சாமி என்ற 72 வயது முதியவர் மற்றும் ஸ்வேதா என்கிற பெண் ஆகிய இருவர் உயிரிழந்துவிட்டனர். கஸ்தூரி என்ற 65 வயது பெண் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டார். அவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு முழுவதும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதால், கஸ்தூரி உயிர் பிழைப்பது சந்தேகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஸ்தூரி - கோபால்சாமி
ஸ்வேதா

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் கோவை மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-building-collapsed-two-died

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக