என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், "அ.தி.மு.க-வில் இரட்டையர்களின் பஞ்சாயத்து ஓய்ந்துவிட்டதா?" என்றோம்.
"அது எப்படி ஓயும்? இரட்டை இலைபோல, இரட்டைத் தலைமைதான் கட்சிக்குச் சரிப்படும் என்று தீர்மானமாக இருக்கிறார் பன்னீர்செல்வம். மனக்கசப்பு ஏற்பட்ட பிறகு, இருவரும் நேரடியாக எதுவும் பேசிக்கொள்வதில்லையாம்.
சில தினங்களுக்கு முன்னர் கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்துச் சில ஃபைல்கள் பன்னீருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று திருப்பி அனுப்பிவிட்டாராம் பன்னீர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுப்பாகியிருக்கிறது" என்ற கழுகாருக்கு இளநீர்ப் பாயசத்தைக் கொடுத்தபடி, "தஞ்சாவூரில் உளவுத்துறை ஏதோ `நோட்' எடுத்ததாமே..." என்றோம்.
ஏலக்காய் நறுமணத்தை ரசித்தபடியே பாயசத்தை அருந்திய கழுகார், "வைத்திலிங்கம் பிறந்தநாள் கொண்டாட்டம்தானே... சொல்கிறேன் கேளும்..." என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார்.
"பொதுவாக வைத்திலிங்கம் தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியதில்லை. ஆனால், செப்டம்பர் 9-ம் தேதி தஞ்சாவூரிலுள்ள அரசு ஆய்வு மாளிகையில் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடியிருக்கிறார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் கட்சிக் கொறடா தாமரை.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போது ஆதரவாளர்கள் சிலர், 'முதல்வர் வேட்பாளர் லிஸ்ட்டில் இருக்கும் அண்ணன் வைத்திலிங்கம் வாழ்க' என்று கோஷமிட, அந்த இடமே ஆரவாரத்தில் திளைத்திருக்கிறது. வைத்திலிங்கமும் சிரிப்பை உதிர்த்தாராம். இந்த விஷயத்தை `நோட்' போட்டு ஆட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளது உளவுத்துறை.''
"அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம் என்று சொல்லும்..."
"ஒரு விவகாரம் சொல்கிறேன்... பெயர் கேட்கக் கூடாது" என்று கண் சிமிட்டிவிட்டுத் தொடர்ந்தார்.
"தொடக்கக்காலத்தில் `சசிகலாவின் தீவிர விசுவாசி' என அடையாளப்படுத்தப்பட்ட அமைச்சர் அவர். அந்த அமைச்சருக்கு, பெண் ஒருவர் உதவியாளராக இருக்கிறார். தினமும் காலை 8 மணிக்கு அமைச்சரின் வீட்டுக்கு வரும் அந்தப் பெண், அமைச்சரை மகிழ்ச்சிக் கடலில் குளிப்பாட்டுவதில் தொடங்கி, சாப்பாடு ஊட்டுவது வரை சகலத்தையும் செய்து குளிர்விக்கிறாராம்.
அமைச்சர் கோட்டைக்குப் புறப்படும் முன்பாக, கொத்தாகச் சில கோரிக்கைக் கடிதங்களை நீட்டி, 'இதெல்லாம் கொஞ்சம் பார்த்து செய்யுங்க' என்று கொஞ்சலாகக் கேட்கிறாராம். அடுத்த இரண்டு மணி நேரத்தில் கோரிக்கைகள் நிவர்த்தி ஆகிவிடுகின்றனவாம். அமைச்சரை 'உடும்பு'ப்பிடியில் வைத்திருக்கும் பெண்ணின் பராக்கிரமத்தைக் கேள்விப்பட்டு இடமாற்றம், டெண்டர் ஃபைல்களோடு பலரும் அவர் வீட்டு வாசலில் `பெட்டி'யோடு நிற்கிறார்கள்!"
- இத்துடன் பா.ஜ.க, தி.மு.க முகாம்களின் உள்ளரசியல் தகவல்களுடன் முழுமையான பகுதியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3irhlyR > மிஸ்டர் கழுகு: சீனியாரிட்டி படிதான் பதவியா? - கொந்தளிக்கும் கனிமொழி ஆதரவாளர்கள்... https://bit.ly/3irhlyR
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/news/politics/tussle-over-aiadmk-cm-candidates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக