Ad

ஞாயிறு, 5 நவம்பர், 2023

``திமுக - பாஜக கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன!” - கொளுத்திப் போடும் CTR நிர்மல் குமார்

``தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி எல்லைமீறி செயல்படுதாக சொல்லப்படும் குற்றசாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?”

``தி.மு.க ஆட்சியில் சீர்கெட்டு போயுள்ள சட்டம் ஒழுங்கு குறித்தும், சீரழிந்துபோன நிர்வாக முறை குறித்தும் பேச ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதேசமயம், இங்குள்ள சித்தாந்தங்களை அரசியல் ரீதியாக ஆளுநர் விமர்சித்துப் பேசுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அதனை அவர் குறைத்துக்கொள்ள வேண்டும்!”

ஆளுநர் ரவி

``ஆளுநர் ஆர்.என் ரவியை இயக்குவதே பா.ஜ.க-தான் என்ற தி.மு.கவின் நீண்ட கால குற்றசாட்டில் அ.தி.மு.க-வுக்கு ஏற்புள்ளதா?”

``காங்கிரஸ், பா.ஜ.க என மத்தியில் யார் ஆட்சியிலிருந்தாலும் தனக்குத் தேவையான ஆட்களைத்தான் ஆளுநர்களாக நியமிப்பார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்களும் மத்திய அரசின் விருப்பத்தின்படியே செயல்படுவது, மாநில அரசுக்கு இடையூறு செய்வது என்பதெல்லாம் வழக்கமானதுதான். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒருபடி மேலே சென்று சித்தாந்தங்களை விமர்சித்து பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்!”

``கூட்டணி முறிந்து 35 நாட்களுக்கு மேல் ஆகியும் எடப்பாடி பா.ஜ.க-வை விமர்சிக்காமல் இருந்தால், ‘பா.ஜ.க-வின் பி-டிம் அ.தி.மு.க’ என்ற விமர்சனம் வரத்தானே செய்யும்?”

எடப்பாடி - மோடி

``தி.மு.கதான் பா.ஜ.கவின் பி டீம். ஆட்சிக்கு வருவதற்கு முன் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் விட்டார்கள், இன்று கையை பிடித்து, காலில் விழாத குறையாகத்தான் வரவேற்கிறார்கள். தி.மு.க தனது எதிரியாக ஆர்.எஸ்.எஸையும் ஆளுநரையும் பிக்ஸ் செய்து அதைவத்து அரசியல் செய்கிறார்களே தவிர மோடியையும் பா,ஜ,கவையும் பெரிதாக எதிர்ப்பதேயில்லை. போகிற போக்கை பார்த்தால் தி.மு.க பா.ஜ.கவும் கூட்டணி வைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பிரதமரும் ஸ்டாலினுன் நல்ல நட்புறவில் இருக்கிறார்கள்”

உதயநிதி ஸ்டாலின்

``நீட் விலக்குகாக தி.மு.க நடத்துகிற கையெழுத்து இயக்கத்தை ‘நாடகம்’ என்று எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரே...?”

``தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதா கொண்டுவந்தபோது அவை ஒருமனதாக நிறைவேற்ற அ.தி.மு.க திணைநின்றதே, அதுபோல காவிரி தீர்மானத்தை ஆதரிக்கத்தான் செய்தோம், ஆனால் இப்போது தி.மு.க நடத்தும் இந்த கையெழுத்து இயக்கம் வெற்று நாடகம். 50 லட்சம் கையெழுத்துகளை பெற்று, எடைக்குத்தான் போட வேண்டும். அதைதாண்டி அதில் எந்த பயனுமில்லை”.

``ஜெயலலிதாவை ‘கொள்ளைக்காரி’ என ஒருகாலத்தில் விமர்சித்த நாம் தமிழரை, அ.தி.மு.க கூட்டணிக்கு அழைத்திருக்கிறீர்களே...?”

``அதுபற்றி எனக்கு தெரியாது. அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரியவில்லை!”

சீமான்

``அ.தி.மு.க-வின் ஐ.டி விங் வலுவாக இருக்கிறதா என்ற சந்தேகங்கள் இருக்கின்றனவே?”

``அ.தி.மு.க ஐ.டி விங் எப்போதுமே சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் கட்டமைப்பை வலிமைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களை இருவரை ஐ.டி விங்-கில் இணைக்கவும் திட்டமிட்டு வருகிறோம்”



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-is-the-b-team-of-bjp-says-admk-ctr-nirmal-kumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக