Ad

வியாழன், 16 நவம்பர், 2023

Tamil News Today Live: மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டம்; சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டம் - தொடங்கியது வாக்குப்பதிவு!

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 7-ம் தேதி, நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள 20 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், மீதம் உள்ள 70 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-news-today-live-updates-dated-on-17-11-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக