Ad

திங்கள், 13 நவம்பர், 2023

வாழ்த்துங்களேன்...

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்த மான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது.

வாழ்த்துங்களேன்


பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர விவரங்களை இனி உங்களின் மொபைல் போன் மூலமே பதிவு செய்யலாம்.

அந்த வகையில், இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்புமிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.

28.11.23 முதல் 11.12.23 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 27.11.23

பாண்டிச்சேரி- ஞானமேடு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில்

28.11.23 முதல் 11.12.23 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, பாண்டிச்சேரி, ஞானமேடு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்தக் கோயில் சகல தோஷ நிவர்த்தித் தலமாகவும், தன, தான்ய லாபங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தலமாகவும் திகழ்கிறது. இங்கே பைரவரின் அங்கத்தில் 9 கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் சஞ்சரிப்பதாக ஐதிகம். ஆத்ம பிரதிஷ்டை செய்து விசேஷ நெற்றிக் கண் ணுடன் அருளும் திவ்ய பைரவர் இத்தலத்தின் விசேஷம்!

இங்கு வந்து வேண்டினாலே ஏமாற்றங்கள், உடல் பிணிகள், முன்வினை பாவங்கள், தோஷங்கள், அச்சங்கள் ஆகிய அனைத்தும் விலகி, சகல நன்மைகளும் உண்டாகும். அற்புதமான இந்த ஆலயத்தில் வாசகர்கள் நீண்ட ஆயுள் நிறைவான வாழ்வு பெறவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!



source https://www.vikatan.com/spiritual/wishes-to-sakthi-vikatan-readers-birthday-and-wedding-day-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக