Ad

திங்கள், 13 நவம்பர், 2023

முதல்வர் நிவாரண நிதியை கையாண்ட வழக்கு... பினராயி விஜயனை விமர்சித்த லோக் ஆயுக்தா பெஞ்ச்!

கேரள மாநிலத்தில் சி.பி.எம் கட்சியின் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக ஆட்சி செய்துவருகிறார். முந்தைய பினராயி விஜயன் ஆட்சியில் என்.சி.பி கட்சியின் தலைவராக இருந்த மறைந்த உழவூர் விஜயனின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. செங்கன்னூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் நாயர் குடும்பத்துக்கு 8.6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், அவரின் மகனுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கவும் அரசு தீர்மானித்தது. மேலும், சி.பி.எம் மாநில செயலாளராக இருந்த மறைந்த கொடியேரி பாலகிருஷ்ணனின் பைலட் வாகனம் மோதிய விபத்தில் இறந்த சிவில் போலீஸ் ஆபீசரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

லோக் ஆயுக்தா

முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து இந்த மூன்று நிதிகளும் வழங்கப்பட்டன. இந்த மூன்று நிகழ்வுகளிலும் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து பணம் வழங்கியது ஊழல் எனவும், வேண்டப்பட்டவர்களுக்காக அரசு நிதி செலவு செய்யப்பட்டதாகவும் ஆர்.எஸ்.சசிகுமார் என்பவர் 2018-ல் லோக் ஆயுக்தாவில் மனு அளித்தார். இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 18 அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஆகியோர் மீது குற்றம்சாடப்பட்டிருந்தது. இந்த மனுவை லோக் ஆயுக்தாவின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது.  அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் தலையிட முடியாது எனவும், பொது பணத்தை கையாள அமைச்சரவைக்கு அனுமதி உண்டு எனவும் லோக் ஆயுக்தா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், அமைச்சரவை முடிவில் நடைமுறை குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று நபர்களிடம் இருந்து உரிய விண்ணப்ப மனு பெறப்படவில்லை எனவும் லோக் ஆயுக்தா கருத்து தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் குறிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது விதிமுறைக்கு முரணானது எனவும், நடைமுறைகளில் குறைபாடு உள்ளதாகவும் லோக் ஆயுக்தா கருத்து தெரிவித்துள்ளது. இதில் ஊழலோ, அல்லது வேண்டப்பட்டவர்களுக்காக செய்யப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. எனவே இந்த மனுமீது தொடர் விசாரணை தேவை இல்லை என லோக் ஆயுக்தா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இந்த வழக்கில் எதிராக தீர்ப்பு வந்திருந்தால் முதல்வர் உள்ளிட்டவர்கள் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதே சமயம் பாதகம் இல்லாத தீர்ப்பு வெளியானதால் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பு குறித்து மனுதாரரான ஆர்.எஸ்.சசிகுமார் கூறுகையில், "முதல்வருடன் இப்தார் விருந்தில் கலந்துகொண்ட நீதிபதிகளிடம் இருந்து வேறு தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/news/general-news/lok-ayukta-bench-slams-kerala-cm-pinarayi-vijayan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக