`வந்தியத்தேவனின் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' என்ற விகடனின் சரித்திர யாத்திரை வெற்றிகரமாக 4-ம் முறையாக உங்களுடன் பயணிக்க இருக்கிறது. அது குறித்த அறிவிப்பு வெளியானதும் உங்களிடம் இருந்து வந்த கேள்விகளும் அதற்கு எங்களின் பதில்களும் இதோ...
வந்தியத்தேவனின் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம், எவ்விதமாக அமையப்போகிறது?
பிற்காலச் சோழர்களில் அருண்மொழித்தேவன் முடிசூட்டிக் கொள்ளுமுன் நடந்த சம்பவங்களைக் கொஞ்சம் கற்பனையோடு கலந்து சொல்லப்பட்டதே 'பொன்னியின் செல்வன்' எனும் தொடர்கதை. இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் உலா வந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வழியே, பயணிக்கப்போகிறது இந்த யாத்திரை.
முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404
முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
இந்த யாத்திரையில் மொத்தம் எத்தனை ஊர்கள் இடம் பெறுகின்றன?
பொன்னியின் செல்வன் கதை தொடங்கும் வீராணம் ஏரிக்கரை முதல் கோடியக்கரை வரையிலுமாக 13 இடங்கள் உள்ளன.
யாத்திரை எப்போது எந்த இடத்திலிருந்து தொடங்கும், எத்தனை நாள்கள் நடைபெறும்?
ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில், சென்னை அண்ணாசாலை - விகடன் அலுவலகத்திலிருந்து பயணம் தொடங்கும். மொத்தம் 3 நாள்கள் (ஆகஸ்ட் 12, 13, 14). நடைபெற்று, ஆகஸ்டு 14 இரவில் கோடியக்கரையில் நிகழ்வுகள் நிறைவடைந்து சென்னைக்குப் புறப்படுகிறோம்.
எந்தெந்த நாள்களில் எந்தெந்த இடங்களைப் பார்வையிடுகிறோம்?
ஆகஸ்ட் 12 (வெள்ளிக்கிழமை): வீராணம், காட்டுமன்னார்கோவில், கடம்பூர்க் கோயில்கள் என 5 இடங்கள். ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் விவரம் கூறும் கல்வெட்டு இதில் சிறப்பம்சம்.
ஆகஸ்ட் 13 (சனிக்கிழமை): பழையாறை, உடையாளூர், திருப்புறம்பியம் என 6 இடங்கள். ராஜராஜன், பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைகள், விஜயாலயன் புகழ் பாடும் திருப்புறம்பியம் இதில் சிறப்பானவை.
ஆகஸ்ட் 14: தஞ்சை, கோடியக்கரை என இரண்டு இடங்கள். இதில் ராஜராஜன் மெய்கீர்த்தி கல்வெட்டு சிறப்பு.
முதல் நாள் குறித்து விவரமாகச் சொல்ல முடியுமா?
வீராணம் ஏரி: கதையின் தொடக்கக்களம். சோழ இளவரசன் ராசாதித்தனால் அமைக்கப்பட்ட பெரும் ஏரி. சோழர்களின் நீர் மேலாண்மைக்கான சாட்சி.
காட்டுமன்னார்கோவில்: கதைச் சம்பவத்தில் இடம்பெறும் வீரநாராயண விண்ணகரம் அமைந்திருப்பது இங்குதான். இவ்வூரிலுள்ள அனந்தேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
மேலக்கடம்பூர் மற்றும் கீழக்கடம்பூர்: சம்புவரையர்களின் மாளிகை அமைந்திருந்த இடம். கதையின் முக்கிய சம்பவங்கள் இடம்பெற்ற களம். இங்கிருக்கும் சிற்பங்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் பெயர்போனவை.
2-ம் நாள் காணப்போகும் இடங்களின் சிறப்பென்ன?
பழையாறை: சோழர்களின் தலைநகரம்.
உடையாளூர்: ராஜராஜச் சோழன் தங்கியிருந்த இடம். இங்குள்ள கயிலாசநாதர் ஆலயம் கல்வெட்டுச் சிறப்பு உடையது. ராஜராஜன் மற்றும் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைகள், சோமநாதேஸ்வரர் திருக்கோயில் மற்றும் நந்திபுர விண்ணகரம் போன்றவை.
திருப்புறம்பியம்: சோழர்களின் சரித்திரத்தை மாற்றிய பெரும்போர் நிகழ்ந்த இடம்.
3-ம் நாள் காணப்போகும் இடங்களின் சிறப்பென்ன?
தஞ்சை: காலத்தால் அழியாத இவ்வூரின் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமா! உலகப்புகழ் பெற்ற பல கல்வெட்டுகளை இங்கே படித்து இன்புறலாம்.
கோடியக்கரை: கதையின் முக்கியப் பாத்திரமான பூங்குழலியை நினைவுகூரும் ஊர்; இங்குள்ள குழகர்கோயிலிலும் கதைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இரவு எங்கெங்கு தங்கப் போகிறோம்?
* ஆகஸ்ட் 12 (வெள்ளிக்கிழமை) - பேருந்துப் பயணம்
* ஆகஸ்ட் 12 மதியம் மற்றும் இரவு - லக்ஷ்மி விலாஸ் காட்டேஜ் (காட்டுமன்னார்கோவில் அருகே)
* ஆகஸ்ட் 13 (சனிக்கிழமை) மதியம் மற்றும் இரவு: இண்டிகோ ரிஸார்ட் (சுவாமி மலை அருகில்)
* ஆகஸ்ட் 14 (ஞாயிறு): பேருந்துப் பயணம்
பயணத்தின் ஊடேயும் தங்கும் இடங்களிலும் சிறப்பு நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?
உண்டு! வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் வழிகாட்டலுடன் அமைகிறது இந்தப் பயணம். மேலும், பாரம்பர்யக் கலைகள், சரித்திரம் பேசுவோம், கலைகள் சொல்லும் கதைகள், களறியாட்டம் என இன்னும் சிறப்பான பரிசுகளுடன் சுவாரஸ்யத்தை அள்ளித் தரப்போகிறது இந்த யாத்திரை.
நாங்கள் கட்டும் கட்டணத்தைத் தவிர வேறு ஏதேனும் விஷயத்துக்காகப் பணம் செலவழிக்க வேண்டி வருமா?
நிச்சயம் இல்லை. உணவு, போக்குவரத்து, வழிகாட்டல், சிறப்பு தரிசனம், பொழுதுபோக்கு நிகழ்வுகள், டீ, காபி என அனைத்தும் இந்தக் கட்டணத்துக்குள் அடங்கும்.
வேறு என்ன சிறப்பு இந்தப் பயணத்தில்?
நாம் செல்லவிருக்கும் இடங்களுக்கு எல்லாம் அந்தந்த மாவட்டத்திலிருந்து விகடனின் போட்டோகிராபர்கள் வந்து நம் பயணத்தை அப்படியே சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் சிறப்பு நேரலைகள் செய்வார்கள். இதை உங்கள் உறவுகளும் நட்பு வட்டாரமும் கண்டு மகிழலாம். பயணம் செய்துவந்த பிறகு, வாசகர்களாகிய நீங்கள் எழுதித்தரும் பயண அனுபவம் சக்தி விகடன் இதழில் வெளியாகும் என்பதும் சிறப்பே.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்களை நேரில் காண வேண்டுமா? விகடன் நடத்தும் 'வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்' நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்...
முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404
முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/spiritual/gods/frequently-asked-questions-regarding-ponniyin-selvan-historical-tour-by-sakthi-vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக