Ad

ஞாயிறு, 17 ஜூலை, 2022

மாதச் சம்பளக்காரர்கள் பணக்காரர் ஆவது எப்படி? விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க நீங்க ரெடியா?

'பணம் சம்பாதிக்கனும்னா நாம வேலை பார்க்கனும்' என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பணம் நமக்காக வேலை செய்யும் என்பது பலருக்குத் தெரியாது. அந்த விஷயம் தெரியாததால்தான் பெரும்பாலானோர் எப்படி பணக்காரர் ஆவது என்பதையும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

நீங்கள் பணக்காரர் ஆவதைத் தடுக்கும் மாயைகள்!

பணத்தை நமக்காக எப்படி வேலை செய்ய வைப்பது என்பதை தெரிந்து கொள்ள முதலில் பணத்தைப் பற்றிய அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணத்தைப் பெருக்குவதற்கு அதை சேமிக்க வேண்டுமா? முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வதுதான் பணத்தைப் பெருக்க உதவும்.

சேமிக்கும் பணம் பெரும்பாலும் பணவீக்கத்தைக் கொண்டு கணக்கிட்டால் எந்த வளர்ச்சியும் கண்டிருக்காது. பணத்தைப் பெருக்க முதலீடு செய்ய வேண்டுமெனில் எதில் முதலீடு செய்வது?

பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில் பணவீக்கத்தை தாண்டியும் நம்முடைய பணம் பெருக வேண்டுமெனில் எந்த முதலீடு சரியானது? நாம் எப்படி ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களோ அப்படித்தான் நம்முடைய பணத் தேவைகளும் வித்தியாசப்படும். நம்முடைய நிதி இலக்குகள் என்னென்ன? அந்த இலக்கை எட்டுவதற்கு ஏற்ப எப்படி பணத்தை கையாள்வது? இப்படி பல விஷயங்களை உள்ளடக்கியதுதான் பணக்காரர் ஆவதற்கான பயணம். அந்தப் பயணத்தை சிறப்பாக முன்னெடுக்க, நிதி சார்ந்த முதலீடுகளில் அனுபவம் மிக்கவர்களின் வழிகாட்டுதல்கள் அவசியமாகிறது.

பண விஷயத்தில் வரவு, செலவு, கடன், முதலீடு, சொத்து என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. இவற்றை சரியான திட்டமிடலுடன் கையாண்டால் மட்டுமே, நம்மால் பணக்காரர் ஆக முடியும். இல்லையெனில் எப்போதுமே சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்து கொண்டு இருக்க வேண்டிய நிலைதான் நீடிக்கும்.

முதலீடு

இதுபோன்ற விவரங்களை நாமாக படித்து தெரிந்து கொள்வதைவிட இந்தத் துறையில் ஆழமான அனுபவம் பெற்றவர்கள் சொல்லும்போது, சீக்கிரம் புரியும். நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி முதலீடு செய்தால் இன்னும் விரைவில் நம்முடைய செல்வத்தைப் பெருக்க முடியும்.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிடல் சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து, `முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்தும்..!' என்ற முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, காஞ்சிபுரத்தில் ஜூலை 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 to 1.00 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் வ. நாகப்பன் சிறப்புரையாற்றுகிறார். ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் சோனல் மேனேஜர் எஸ்.குருராஜ், மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் இருவரும் உரையாற்றுகிறார்கள்.

நாணயம்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் முதலீடு குறித்த தெளிவை நீங்கள் பெறலாம். அது உங்களுடைய நிதி சார்ந்த பழக்க வழக்கங்களையே தலைகீழாக மாற்றிவிடும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, அனுமதி முற்றிலும் இலவசம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள https://bit.ly/NV-Adityabirla என்ற லிங்கில் முன்பதிவு செய்யவும்.



source https://www.vikatan.com/business/finance/how-can-salaried-people-get-rich-nanayam-investor-awareness-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக