Ad

ஞாயிறு, 24 ஜூலை, 2022

தண்டோரா

தமிழர் மரபு வேளாண்மை மாநாடு

கடலூர் மாவட்டம், பெண்ணாடம், இரத்தின மகாலில் ஜூலை 30-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழக உழவர் முன்னணியின் சார்பில் ‘தமிழர் மரபு வேளாண்மை மாநாடு’ நடைபெறவுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிவியலாளர் ராமஆஞ்சநேயலு, கரும்பு கண்ணதாசன், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், வேளாண் பொருளியல் ஆய்வாளர் கி.வெங்கட்ராமன், தாளாண்மை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த நடராஜன், சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா உள்ளிட்ட பலர் உரையாற்றுகிறார்கள்.

தொடர்புக்கு, செல்போன்: 94439 04817.

வளங்குன்றா இயற்கை திருவிழா

இயற்கை ஆர்வலர்கள் ஏற்பாட்டில் சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் ‘வளங்குன்றா இயற்கை திருவிழா - 2022’ ஆகஸ்ட் 5, 6, 7 தேதிகளில் நடைபெற உள்ளது. இயற்கை உணவு, விதைகள், விதைகளுக்கான அரங்குகள், விதைப் பரிமாற்றம், நஞ்சில்லா இயற்கை உணவு கண்காட்சி மற்றும் கருத்தரங்கும் நடைபெற உள்ளன. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு, செல்போன்: 98408 73859.

விற்பனைத் திருவிழா

சென்னை போரூர், ராஜ்மஹால் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 6 முதல் 10-ம் தேதி வரை ‘இயற்கை உற்பத்திப் பொருள்கள் விற்பனைத் திருவிழா’ நடைபெற உள்ளது. இயற்கை விவசாயிகளின் விளைபொருள்கள், பனைபொருள்கள், சித்த மருத்துவப் பொருள்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. அனுமதி இலவசம்.

ஏற்பாடு: உட்லா அறக்கட்டளை.

தொடர்புக்கு, செல்போன்: 98404 45957.

விதைத் திருவிழா

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 31-ம் தேதி, ‘விதைத் திருவிழா’ நடைபெற உள்ளது. பாரம்பர்ய விதைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளது. விவசாயிகள் விளைவித்த இயற்கை விளைபொருள்களும் திருவிழாவில் இடம்பெற உள்ளது. அனுமதி இலவசம்.

ஏற்பாடு: செந்தமிழ் இயற்கை வழி வேளான் நடுவம், தமிழ்க்காடு

தொடர்புக்கு, செல்போன்: 88708 90109, 94439 04817.

புதுச்சேரி விதைத் திருவிழா

புதுச்சேரி தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 30-ம் தேதி, ‘புதுச்சேரி விதைத் திருவிழா-2022’ நடைபெற உள்ளது. பாரம்பர்ய விதைகள் பரிமாற்றம், பனை பொருள்கள் விற்பனை, இயற்கை உணவு பொருள்கள் குறித்த கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. அனுமதி இலவசம்.

ஏற்பாடு: புதுச்சேரி இளம் விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தாகூர் கலை அறிவியல் கல்லூரி.

தொடர்புக்கு, செல்போன்: 97874 72353.

எரிவாயு தயாரித்தல்

கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’, 27–ம் தேதி ‘இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரித்தல் மற்றும் சமையல் அறை கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ பயிற்சி நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.150 (உணவு தவிர்த்து). முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.



source https://www.vikatan.com/news/agriculture/agriculture-trainings-announcement-around-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக