தே.மு.தி.க துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தி.மு.க, காங்கிரஸ் ஆட்சி காலத்தின் தான் நீட்தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது தே.மு.தி.க ஆதரவு தெரிவித்தது. இந்தியா முழுவதும் நல்ல திறமையான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அந்த நிலைப்பாட்டை எடுத்தோம். அதற்கு முன் இந்தியா முழுவதும் ஒரே கல்வி கொள்கையை அறிவிக்கவேண்டும் என்று தே.மு.தி.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வை சாதகமாக வைத்து தி.மு.க கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன. நீட் தேர்வில் மாணவர்கள் மரணம் என்பது தமிழகத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் பாதிப்புகள் இருக்கும். ஆனால் நீட் தேர்வை கண்டு மாணவர்கள் அச்சபடாமல் தைரியமாக சந்திக்க வேண்டும். அதனால் தான் அகில இந்திய அளவில் ஒரே கல்வி கொள்கையை அறிவிக்கவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.
தொடர்ந்து, ``நீட் தேர்வு தொடர்பாக மாணவி இறந்த போது அரசியல் கட்சிகள் முதலில் சென்று பார்த்தார்கள். பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. மக்களை திசைதிருப்பி அரசியல் செய்ய நீட்தேர்வை தி.மு.க கையில் எடுத்துள்ளது. ஆனால் இது போன்ற உதவிகளை அரசு செய்ய கூடாது. இது அவர்களை ஊக்குவிப்பது போல ஆகிவிடும். கொரோனா காலத்தில் தேர்வுகள் கட்டாயமா என்பது பற்றி எடுத்துக்காட்டு கூறுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. ஆனால் நடிகர் சூர்யா நீதிமன்றம் குறித்து கருத்து சொல்லாமல் வேறு எதாவது கூறியிருக்கலாம்.
தே.மு.தி.க இப்போதும் அ.தி.மு.க கூட்டணியில் தான் இருக்கிறது. வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தை அறிந்து பின்னர், வரும் டிசம்பர் மாதம் நடக்கும் கட்சி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்படும்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் முதல் தொண்டர்களை சந்திக்க வருவார். தமிழகத்தில் பலமான கட்சியாக தே.மு.தி.க உள்ளது. எனவே அ.தி.மு.க கூட்டணியில் அதிகபடியான சீட் கேட்போம். நடிகர் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் அதற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் குறித்து பேசலாம். சட்டசபை தேர்தல் வரட்டும் அதற்கு பிறகு கூட்டணியில் எத்தனை சீட்டுகள் என பேசலாம்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmdk-sutheesh-press-meet-in-kumari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக