Ad

திங்கள், 14 செப்டம்பர், 2020

சென்னை: மொட்டை மாடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண்! - திருமணமான 6 மாத்தில் சோகம்

திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு கிராமம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் மேருநாதன் (46). இவர் கோயிலில் அர்ச்சகராக வேலைபார்த்து வருகிறார். மேருநாதனின் மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு தேவநாதன் (24) என்ற மகனும் மதுஸ்ரீ (22) என்ற மகளும் உள்ளனர். மதுஸ்ரீ, பிபிஏ படித்தார். ஆனால், அந்தப் படிப்பை அவர் நிறைவு செய்யவில்லை.

மரணம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மதுஸ்ரீ, வினோத் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் இல்லற வாழ்க்கை சரியாக அமையாததால், விவாகரத்துப் பெற்றுவிட்டார். அதன்பிறகு பட்டாபிராம் அணைக்கட்டுசேரி பெரியார் தெருவைச் சேர்ந்த அர்ச்சகர் விக்னேஷ்வரன் என்பவருடன் மதுஸ்ரீக்கு 20.2.2020-ல் பட்டாபிராம் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் திருமணம் நடந்தது.

இந்தநிலையில், 12.9.2020-ல் மாலை மாடியில் துணியைக் காயபோட மதுஸ்ரீ சென்றார். நீண்டநேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. அதனால் விக்னேஷ்வரன், மாடிக்குச் சென்று பார்த்தார். அப்போது மதுஸ்ரீ மயங்கிக் கிடந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ்வரன், மனைவி மதுஸ்ரீயை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மதுஸ்ரீ இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

எப்ஐஆர்

Also Read: சென்னை: அறைக்கு வெளியே கிடந்த 6 வேளை உணவு; மர்ம மரணம்! - அதிர்ச்சி கொடுத்த 5 நட்சத்திர ஹோட்டல்

இதுகுறித்து பட்டாபிராம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மற்றும் போலீஸார், மதுஸ்ரீயின் மர்ம மரணம் குறித்து விசாரித்தனர். பின்னர், மதுஸ்ரீயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில்தான் மதுஸ்ரீயின் மரணத்துக்கானக் காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் மதுஸ்ரீயின் சடலத்தில் எந்தவிதக் காயங்களும் இல்லை என தெரியவந்துள்ளது.

மதுஸ்ரீயின் மரணம் குறித்து அவரின் தந்தை மேருநாதன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``என் மகள் மதுஸ்ரீ திருமண நாள் முதல் எங்களிடம் சரிவரப் பேசுவதில்லை. எனது மகளின் மரணம் குறித்து விசாரித்து, சடலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் மர்மமான முறையில் மாடிப்பகுதியில் இறந்துக் கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/young-woman-suspicious-death-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக