Ad

சனி, 12 செப்டம்பர், 2020

3,842 மையங்கள்; 15.97 லட்சம் பேர்! - நீட் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்கள் #NowAtVikatan

நீட் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்கள்!

நீட் தேர்வு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் இருந்து இந்தத் தேர்வுக்காக சுமார் 18,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Also Read: நீட் தேர்வு: தர்மபுரி, நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை! - தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்

இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47,54,356 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

covid-19

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,114 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,626 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், 24 மணி நேரத்தில் 78,586 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 37.02 ஆகவும் உயர்ந்துள்ளது.

Also Read: கொரோனா எச்சரிக்கை... - அச்சுறுத்தும் இரண்டாவது அலை!



source https://www.vikatan.com/news/general-news/13-09-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக