Ad

வியாழன், 16 பிப்ரவரி, 2023

Maha Shivratri 2023: பக்தி, ஸித்தி, முக்தி மூன்றும் அருளும் மகா சிவராத்திரி பூஜையின் பலன்கள்!

'ஓம் தத்புருஷாய வித்மஹே

மகா தேவாய தீமஹி

தந்நோ ருத்ர ப்ரசோதயாத்'

தேவியை வழிபட நவராத்திரி எனப்படும் ஒன்பதுநாள்கள் இருப்பது போல் மஹாதேவரான சிவபெருமானை வழிபடச் சிறந்த நாள் மகா சிவராத்திரி. 'ஓம் நமசிவாய' என்ற மந்திரம் நாளும் ஜபிக்கவே அந்த பரமேஸ்வரர் பாதம் அடையலாம் என்பது நம்பிக்கை.

பிரம்மாவும் விஷ்ணுவும் காண முயன்றும் அடிமுடிகாண முடியாத அருணாச்சலேஸ்வரரை, தேவர்களுக்காக ஆலகால விஷத்தை அருந்திய நீலகண்டனை இந்த உலகில் ஐந்தொழில் புரிந்து அருளும் நாயகனை ஒரு ராத்திரி முழுதாய் தியானிக்க உகந்த அற்புதமான நாள் மகா சிவராத்திரி.
மாசி மாத சிவராத்திரி

மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் நாள் சனிக்கிழமை மகா சிவராத்திரி தினமாக அமைகிறது.

அன்றைய தினம் சிவாலயங்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும். இந்த சிவராத்திரி நாளில் கண்விழித்து வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை உணர்த்தப் புராணங்களில் ஏராளமான நிகழ்வுகள் உள்ளன.

முசுகுந்த சக்கரவர்த்தியின் கதை:

நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் காரியத்திற்கும் பலன் தருபவரே சிவபெருமான். முசுகுந்த சக்ரவர்த்தி மூவுலகையும் வெற்றி கொண்டவர், கிருஷ்ணனை கால்யாவான் என்ற அசுரனிடமிருந்து இருந்து காப்பாற்றியவர், வாலாசுரனை அழிக்க இந்திரனுக்கு உதவியவர், திருவாரூரில் இந்திரனிடமிருந்து பெற்று வந்து தியாகராஜரை ஸ்தாபித்தவர். ஒரு மனிதர் இவ்வளவு புகழ் பெறக் காரணம் என்ன? இதற்கு விடையாய் அமைகிறது அவரின் முன் ஜன்ம வரலாறு.

முசுகுந்த சக்ரவர்த்தி, முன் ஜன்மத்தில் பிரம்மாவைக் கேலி செய்ததற்காகக் குரங்காய் பிறக்க சபிக்கப்பட்டார். குரங்காகப் பிறந்தவர் பெற்றவர் ஒரு நாள் வில்வ மரத்தில் தஞ்சம் புகுந்தது. பொழுது சாய்ந்ததும் குரங்கு இரவு அந்த மரத்திலேயே தங்கியது. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து மரத்தில் இலைகளைப் பறித்துக் கீழே போட்டுக்கொண்டே இருந்தது. அந்த நாள் சிவராத்திரி தினமாகவும் அமைந்தது.

அந்த மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. குரங்கு பறித்துப்போட்ட வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை போல் வீழ்ந்தன.

அறியாமல் குரங்கு தன் மேல் போட்ட வில்வ தளங்களை அர்ச்சனையாகவே சிவனார் ஏற்றார். விழித்திருந்து இரவு முழுவதும் அர்ச்சித்த குரங்குக்கு ஈசன் காட்சிகொடுத்து, 'அடுத்த ஜன்மத்தில் மூவுலகும் ஆளும் சக்கரவர்த்தியாகப் பிறப்பாய்' என வரமளித்தார்.

மகா சிவராத்திரி

தான் செய்தது இன்னதென்று தெரியாத குரங்கிற்கே வரமளித்தவர் மஹாதேவர். ஈசனிடம் வரம்பெற்ற முசுகுந்தர் எப்பிறப்பிலும் இந்த நிகழ்வை நான் மறக்கூடாது என்பதற்காக குரங்கு முகத்தோடே பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவ்வாறே பிறந்தார்.

அறியாமல் செய்ய வழிபாட்டுக்கே இவ்வளவு பலன் இருக்கும் என்றால் அறிந்தே அந்த ஈசனை வழிபட்டால் எவ்வளவு பலன்கள் கிடைக்கும்... பரமேஸ்வரை நினைத்தாலே பாவம் நீங்கும். அப்படி இருக்க சிவராத்திரியில் அவரை பூரணமாய் தியானித்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும்.

பிரம்மா, சரஸ்வதியை மனைவியாகப் பெற்றதுடன் படைக்கும் பதவியை அடைந்ததும் இந்த மகா சிவராத்திரி விரதத்தால்தான் என்கின்றன புராணங்கள். அதேபோல மகாவிஷ்ணு சக்ராயுதம் பெற்றதும், மகாலட்சுமியை அடைந்ததும் இந்த விரதத்தின் மகிமையால் என்று புராணங்கள் கூறுகின்றன.

மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். அதுமட்டுமா, பக்தி, ஸித்தி, முக்தி என்ற மூன்றும் அருளும் நாளும் மகா சிவராத்திரியே!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

பரமேஸ்வர த்யான மந்திரம்:

நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.

சிவராத்திரி இரவு முழுதும் இந்த மந்திரம் சொல்லி சிவபெருமானை வழிபட்டு சகல நலத்தையும் வளத்தையும் அடையலாம்.

மகா சிவராத்திரி
இந்த ஆண்டு 2023 பிப்ரவரி 18-ம் நாள் சனிக்கிழமை அன்று மகா சிவராத்திரி நாளில் சக்தி விகடன் வாசகர்கள் பயன் அடையும் விதம், அவர்களின் குடும்பத்தாரும், சுற்றத்தாரும், நண்பரும் நன்மைகளையும் பெறும் பொருட்டு, திருவாவடுதுறை ஆதினத்துக்கு உட்பட்ட பிரசித்திபெற்ற 4 சிவாலயங்களில், சிறப்பு சங்கல்பப் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

முதல் காலம்: தென் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம்

2-ம் காலம்: திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் ஆலயம்

3-ம் காலம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம்

4-ம் காலம்: திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்.

தேவாரப் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே அறிந்து இருக்கலாம். எண்ணியவை யாவையும் அருளும் இந்த சிறப்புச் சங்கல்ப வழிபாட்டில் நீங்களும் சங்கல்ப முன்பதிவு செய்து உங்கள் பிரார்த்தனையைச் சமர்ப்பிக்கலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/gods/maha-shivaratri-festival-and-worshipping-lord-siva-on-this-auspicious-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக