Ad

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

கொரோனா பொது முடக்கத்துக்குப் பின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.82,000 கோடி செலவிட்ட இந்தியர்கள்!

கொரோனா தாக்கத்துக்குப் பிறகு இந்திய மக்கள் வெளிநாடு களில் அதிகம் செலவு செய்வதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2022 - 2023 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் இந்தியர்கள் வெளிநாட்டு பயணங்களில் ரூ.82,000 கோடி வரை செலவிட்டுள்ளனர். வழக்கத்தைவிட இந்த நிதியாண்டில் மிக அதிகமான அளவுக்கு செலவு செய்துள்ளனர் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணம்

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ``நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்தியர்கள் தங்களது வெளிநாட்டு பயணங்களுக்கு 1,000 கோடி டாலர்கள் செலவு செய்துள்ளனர். இது இந்திய மதிப்பின்படி, ரூ.82,000 கோடியாகும். இந்த தொகையானது முந்தைய நிதியாண்டுகளில் செய்த செலவைவிட மிக அதிகமாக உள்ளது.

2022 டிசம்பர் மாதத்தில் மட்டுமே, இந்திய மக்கள் 1,137 மில்லியன் டாலர்களை வெளிநாட்டு பயணத்துக்காக செலவு செய்துள்ளனர். கல்வி, வெளிநாடுகளில் தங்கி இருக்கும் உறவினர்களை பராமரிக்க, அவர்களுக்கு பரிசுகள் வழங்க மற்றும் முதலீடு களுக்காக செலவிடப்படும் அன்னியச் செலாவணியைக் கணக்கிட்டால், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட மொத்தப் பணம் 1,935 கோடி டாலர்களாகும்.

வெளிநாட்டு பயணம்

இருப்பினும், பயணச் செலவுகள் அதிகரித்து வருவதால், இந்தியர்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் தங்கள் உறவினர்களுக்கு இப்போது குறைவாகவே செலவிடுகின்றனர். 2018 நிதியாண்டில் 26 சதவிகிதமாக இருந்த மொத்த வெளிநாட்டுச் செலவில் பணம் அனுப்பும் பங்கு 2023-ம் நிதியாண்டில் 15 சதவிகிதமாகக் குறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.



source https://www.vikatan.com/personal-finance/money/indians-spent-rs82000-crores-on-foreign-trips-after-the-corona-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக